சினிமாபொழுதுபோக்கு

சம்யுக்தாவை பார்த்து கண் கலங்கிய பாலா – பாச போராட்டங்களுடன் வெளியான பிக்பாஸ் ப்ரோமோ!

பிக்பாஸ் வீட்டுக்குள் ஒரே நேரத்தில் ஆச்சர்ய என்ட்ரி கொடுத்த தனது இரு தோழிகளையும் பார்த்ததில் சந்தோசத்தில் திக்கு முக்காடிப்போனார் பாலாஜி. இன்றைய எபிசோடுக்கான முதல் ப்ரோமோவில் இந்த காட்சி இடம்பெற்றுள்ளது.

ரீ- என்ட்ரி:

பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது. இந்த சீஸனின் கடைசி வாரமான இந்த வாரத்தில் பழைய போட்டியாளர்கள் ரீ- என்ட்ரி கொடுத்துவருகிறார்கள். இன்னிலையில் இன்றைய எபிசோடுக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் பாலாஜியின் நெருங்கிய தோழிகளான சுசித்ராவும் சம்யுக்தாவும் ஒரே நேரத்தில் என்ட்ரி கொடுத்து பாலாஜியை சந்தோசத்தில் திக்குமுக்காட செய்துள்ளனர்.

முன்னதாக என்ட்ரி கொடுத்த சுச்சி பாலாஜியுடன் சோபாவில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கையில் பிங்க் நிற பிளேசர் உடையில் என்ட்ரி கொடுக்கிறார் சம்யுக்தா. ரம்யா பாண்டியன் அழைத்து வந்த சம்யுக்தாவை பார்த்ததும் கண்கலங்கி கட்டியணைத்து ” I missed you, I missed you” என்று புலம்புகிறார். இருவரும் கட்டியணைத்து தங்களது அன்பை பரிமாறிக்கொள்கின்றனர்.

boss

இந்நிலையில் ஏற்கனவே என்ட்ரி கொடுத்துள்ள அர்ச்சனா ஆரியிடம் கோபப்பட்டதற்காக “உன்னை நினைத்து பெருமை படுகிறேன்” என்று சொல்லி பாலாஜியை ஏற்றிவிட்டார் . தற்போது ஆரியை பிடிக்காத சம்யுக்தாவும் வீட்டுக்குள் நுழைந்துள்ளார். இன்னும் என்னவெலாம் நடக்க போகிறது என்பதை அறிய பிக்பாஸ் ரசிகர்கள் ஆவலாக காத்துக்கொண்டிருக்கின்றனர்.

Back to top button
error: Content is protected !!