விளையாட்டு

கிரிக்கெட் வீரர் டி வில்லியர்ஸுக்கு பெண் குழந்தை – மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!

நட்சத்திர பேட்ஸ்மேன் வீரர் டி வில்லியர்ஸுக்கு பெண் குழந்தை பிறந்தது. ஏற்கனவே இவருக்கு ஒரு மகளும் மகனும் உள்ளது. இந்நிலையில் மீண்டும் ஒரு பெண்குழந்தைக்கு தந்தையாகியுள்ளார் டி வில்லியர்ஸ்.

டி வில்லியர்ஸ்:

டி வில்லியர்ஸ் என்பவர் தென்னாபிரிக்கா அணியின் சிறந்த பேட்ஸ்மேன் மற்றும் இவர் டைடன்ஸ் அணிக்காக உள்ளூர் போட்டிகளில் விளையாடி வருகிறார். அனைத்து
காலத்திற்குமான சிறந்த பேட்ஸ்மேன் இவர் ஒருவராக கருதப்படுகிறார். இவர் பல சாதனைகளை புரிந்துள்ளார். குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில் அதி விரைவாக 50, 100, 150 ஓட்டங்கள் அடித்த தென்னாபிரிக்கா வீரர் என்ற சாதனைகளை படைத்துள்ளார். இந்தியன் பிரீமியர் லீக் போட்டி தொடரில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

villiers

டி வில்லியர்ஸூக்கு ஒரு மகளும் மகனும் உள்ளது. இந்நிலையில் மீண்டும் ஒரு பெண்குழந்தைக்கு தந்தையாகியுள்ளார். கடந்த நவம்பர் 11 ஆம் தேதி குழந்தை பிறந்ததாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். கடந்த வருடம் மே மாதம் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற போவதாக அறிவித்தார். மேலும் திடீர் ஓய்வு அறிவிப்பை சமூகவலைத்தளத்திலும் வெளியிட்டார். இந்நிலையில் இவரை தென்னாபிரிக்கா அணியில் சேர்த்து டி20 உலக போட்டிகளில் விளையாட வைக்கும் முயற்சிகள் போய்க்கொண்டிருக்கிறது.

loading...
Back to top button
error: Content is protected !!