தமிழ்நாடு

பப்ஜி மதன் மீது குண்டர் சட்டம் – யூடூப் சேனலை முடக்கியதால் வருமானம் இல்லை மனைவி கிருத்திகா விளக்கம்!!

யூடியூப் சேனலில் பப்ஜி விளையாட்டின் மூலமாக சிறுமிகள், பெண்களிடம் ஆபாசமாக பேசி வீடியோக்களை வெளியிட்ட பல கோடி சம்பாதித்த பப்ஜி மதன் மீது குண்டர் சட்டம். அவர் மீது சம்மந்தமில்லாமல் விசாரிக்காமல் அவர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டது குற்றம் என்று அவரது மனைவி தெரிவித்துள்ளார்.

பப்ஜி என்ற மொபைல் கேம் நம் நாட்டில் அதிகப்பேரால் வரவேற்கப்பட்ட ஒரு செயலி ஆகும். பப்ஜிக்கு பல பேர் அடிமையாகிவிட்டனர், இதன்மூலம் விளைவுகள் அதிகம் இருப்பதால் இந்திய அரசு ஒரு காலகட்டத்தில் இந்த கேமை பயன்படுத்த தடைவிதித்தது. பின் சில கட்டுப்பாடுகள் கொண்டு விதிமுறைகளுக்கு கீழ் மீண்டும் இந்தியாவிற்குள் வந்தது. இந்த கேம் மூலமாக யூடியூப் சேனலில் வாலிபர் மதன் என்பவர் சிறுமிகள், பெண்களிடம் ஆபாசமாக பேசி இந்த கேமின் விளையாட்டு வீடியோக்களை யூடியூப் சேனலில் வெளியிட்டார்.

Tamil News large 2787224

பப்ஜி மூலம் யூடியூபில் கோடிக்கணக்கில் சம்பாதித்த மதன்…
பின் இவரின் இந்த செயலை கண்டு பல புகார்கள் வந்தான். வந்த புகார்களின் அடிப்படியில் இவரை காவல்துறையினர் தேடி வந்தனர், பின் தர்மபுரியில் உள்ள ஒரு ஹோட்டல் ரூமில் பதுங்கியிருந்ததாக தகவல் வந்ததது. பின் அந்த இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மதனை கடந்த மாதம் 18-ந் தேதி கைது செய்யப்பட்டு விசாரணைக்கு அழைத்து சென்று விசாரித்து வந்தனர். விசாரணையின் போது மதன் பல கோடி சம்பாதித்ததாகவும், 2 சொகுசு கார்கள், ஆடம்பர வீடு மற்றும் சொத்துக்கள் வாங்கியதாக தகவலை வந்தான. பின் அவரை சிறையில் அடைத்தனர். இவருக்கு மூல காரணமாக மனைவிதான் இருந்தார் என்றும் இவருக்கும் பங்கு உள்ளது, இவர்தான் தவறான வார்த்தையில் மதனுடன் வீடியோவில் பேசியது என்று மதனின் மனைவி மற்றும் ஒரு கை குழந்தை ஆகியோரையும் சென்னை புழலில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

பப்ஜி மதன் மற்றும் மனைவி கிருத்திகாவும் ஜாமீன் மனு கேட்டு கோரிக்கை விடுத்தனர், அப்பொழுது கிருத்திகாவிற்கு மட்டுமே ஜாமீன் கிடைத்தது. மதனின் மனு நிராகரிக்கப்பட்டு அவர்மீது குண்டர் சட்டம் போடப்பட்டது. பின் வெளியே வந்த கிருத்திகா செய்தியாளர்களை சந்தித்த பேசினார். அதில் என் கணவர் மதன் மீது பொய்யான குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது. அவரை விசாரிக்காமல் எந்த ஒரு முகாந்திரம் இல்லாமல் குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது. இதை நான் நேர்மையாக எதிர்கொள்வேன், அதுமட்டுமில்லால் அவர் பண மோசடி எதுவும் செய்யவில்லை, யாரையும் ஏமாற்றவில்லை பணம் பறிக்கவில்லை. அவர் எந்த சொத்துக்களும் வீடும் வாங்க வில்லை, எங்களிடம் இருந்தது ஒரு ஆடி கார் மட்டுமே அதுவும் மதன் பெயரில் இல்லை. போலீசார் பறிமுதல் செய்த இன்னொரு கார் யாருடையது என்று சொல்ல வேண்டும்.

பப்ஜி மதன் மீது குண்டர் சட்டம்..
வீடு கூட எங்களுடையது அல்ல. அதேபோல் வீடியோவில் பேசியது என் குரல் இல்லை, எனக்கும் அதுக்கும் எந்த சம்மந்தம் இல்லை, வங்கி கணக்கிற்கு மட்டுமே என்னுடையது பயன்படுத்தப்பட்டது என்றார். அவர்மீது 100க்கும் மேற்பட்டோர் புகார் அளித்ததாக கூறினார்கள், ஆனால் 4பேர் மட்டுமே புகார் கொடுத்துள்ளனர் அதுவும் பொய்யான தகவல் என்று கூறினார். எங்களது யூடியூப் சேனலை முடக்கியதால் எங்களது குடும்பம் வாழ்வாதாரத்தை இழந்து வருமானம் இல்லாமல் தவித்து வருகின்றோம் என்று கிருத்திகா செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: