தமிழ்நாடு

B.E., B.Tech மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் அட்டவணை – வெளியீடு!!

தமிழகத்தில் B.E மற்றும் B.Tech பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கவுன்சிலிங் 27ம் தேதி தொடங்கி அக்டோபர் 17ம் தேதி வரை 4 கட்டமாக நடக்கும் என்று தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தாக்கம் தீவிரமாக பரவி வந்த நிலையில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டது. அதனை தொடர்ந்து ஆன்லைன் மூலம் பாடங்கள் மற்றும் தேர்வுகள் நடத்தப்பட்டது. கொரோனா தாக்கத்தின் காரணமாக நேரடி முறையில் தேர்வுகள் நடத்த முடியாத சூழல் உருவான நிலையில் அவை ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் அனைவரும் பாஸ் என அறிவிக்கப்பட்டது. முந்தைய தேர்வுகளில் மாணவர்களின் மதிப்பெண் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டது.

அதனை தொடர்ந்து 12ம் வகுப்பு மாணவர்கள் உயர்கல்வியில் தங்களுக்கு விருப்பமான பாடப்பிரிவை தேர்வு செய்து வருகின்றனர். தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகம் உட்பட பொறியியல் கல்லூரிகளில் இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கியது. இதுவரை பொறியியல் படிப்பிற்கு 1 லட்சத்து 74 ஆயிரம் மாணவ மாணவிகள் விண்ணப்பித்துள்ளதாக தரவுகள் கூறியுள்ளன. இதில் 1 லட்சத்து 45 ஆயிரம் பேர் மட்டுமே கட்டணம் செலுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்களை தொடர்ந்து 1 லட்சத்து 39 ஆயிரம் விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

தற்போது தொழில்நுட்ப கல்வி இயக்ககம் 1,36,973 பேர் கலந்து கொள்ள வேண்டிய கவுன்சிலிங் அட்டவணையை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலின் படி, 1 முதல் 14,788 வரை உள்ளவர்களுக்கு செப்.,27 முதல் அக்., 5ம் தேதி வரை முதல் சுற்று கவுன்சலிங்கில் பங்கேற்க வேண்டும். 14,789 முதல் 45227 எண் வரை அக்., 1ம் தேதி முதல் அக்.,9ம் தேதி வரை 2ம் சுற்று கவுன்சிலிங்கில் பங்கேற்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

42228 முதல் 86228 வரை உள்ளவர்கள் அக்டோபர் 5ம் தேதி முதல் 13ம் தேதி வரை நடக்கும் 3வது சுற்று கவுன்சிலிங்கில் பங்கேற்க வேண்டும். இதனை தொடர்ந்து 86119 முதல் 136973 வரை உள்ளவர்கள் அக்டோபர் 9ம் தேதி முதல் அக்டோபர் 17ம் தேதி வரை நடக்கும் 4வது சுற்று கவுன்சிலிங்கில் பங்கேற்க வேண்டும் எனவும் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  நீட் தேர்வுக்கு எதிராக புதிய சட்டம் – ஜனாதிபதியிடம் ஒப்புதல் பெற திட்டம்!!
Back to top button
error: