விளையாட்டு

இந்தியர்களை இனவெறியுடன் திட்டிய ஆஸ்திரேலியா ரசிகர்கள் – ஐசிசி இடம் புகார்!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணி தற்போது தங்களது 3 வது டெஸ்ட் போட்டி விளையாடி வருகிறது. போட்டியின் போது ஆஸ்திரேலியா ரசிகர்கள் இந்தியா அணி வீரர்களை இனவெறியுடன் திட்டியதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து இந்தியா அணி கேப்டன் ரஹானே மேட்ச் ரெப்ரியிடம் புகார் தெரிவித்துள்ளார்.

இந்தியா vs ஆஸ்திரேலியா:

தற்போது இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணியினர் தங்களது டெஸ்ட் தொடர்களை விளையாடி வருகிறது. தற்போது இரு அணிகளுக்கும் இடையேயான 3 வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டி சிட்னியில் வைத்து நடைபெறுகிறது. இந்த போட்டியின் போது இனவெறியுடன் ஆஸ்திரேலியா ரசிகர்கள் திட்டியதாக ஓர் அதிர்ச்சியான புகார் எழுந்துள்ளது. போட்டியின் இரண்டாவது நாளான நேற்று இந்தியா அணியின் வேக பந்து வீச்சாளர்கள் பும்ராஹ் மற்றும் சிராஜை ஆஸ்திரேலியா ரசிகர்கள் இன ரீதியாக திட்டியுள்ளார்.

Bumrah Siraj Test AP sfdsf 571 855

ஆனால் அதனை அப்போது பொருட்படுத்தாமல் விட்டனர். போட்டியின் மூன்றாம் நாளான இன்றும் இதே போல் சம்பவம் அரங்கேறியுள்ளது. எனவே இதை பற்றி இந்தியா அணியின் கேப்டன் ரஹானே, அஸ்வின், பும்ராஹ் மற்றும் சிராஜ் மேட்ச் ரெப்ரி டேவிட் பூனிடம் இதனை பற்றி புகார் அளித்துள்ளனர். இன ரீதியாக சீண்டுவது ஆஸ்திரேலியா ரசிகர்களுக்கு புதியது அல்ல. ஏற்கனவே இதே போல் பல சம்பவங்கள் நடந்துள்ளது. ஏற்கனவே மூன்றாம் டெஸ்ட் போட்டியின் முன்பு இந்தியா அணி வீரர்கள் பாதுகாப்பு வலயத்தை மீறியுள்ளார்கள் என்று ஊடகங்களில் தெரிவித்து சீண்டி வருகின்றனர். தற்போது இதே போல் ஓர் சம்பவம் நடந்துள்ளது. இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படுமா?? என்பதை பொறுத்திருந்து காண்போம்.

Back to top button
error: Content is protected !!