தமிழ்நாடு

நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் கவனத்திற்கு – மனநல ஆலோசனை!!

தமிழகத்தில் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு தொலைபேசி வாயிலாக மனநல ஆலோசனை வழங்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் மத்திய அரசால் நடத்தப்படும் மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கடந்த அதிமுக ஆட்சியிலும் குரல் எழுப்பட்டது. தற்போது திமுக ஆட்சியிலும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது பேசிய முக ஸ்டாலின் திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்தார். அதன்படி நீட் தேர்வை ரத்து செய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் முதல்வர் முக ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி நீட் தேர்வானது கடந்த 12ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும் நடைபெற்றது. இந்த நீட் தேர்வு அச்சம் காரணமாக மாணவர்கள் உயிரிழப்பது தொடர்ந்த வண்ணம் உள்ளது. நீட் தேர்வு சரியாக எழுதவில்லை என்ற பயத்தால் நேற்று தனுஷ் என்ற மாணவர் உயிரிழந்த நிலையில் இன்று அரியலூர் துளாரங்குறிச்சியில் நீட் தேர்வு எழுதிய மாணவி கனிமொழி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நீட் தேர்வால் தமிழகம் பல மாணவர்களின் உயிரை இழக்கிறது. அதனால் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு தொலைபேசி வாயிலாக மனநல ஆலோசனை வழங்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் 104 என்ற எண்ணை தொடர்பு கொண்டு மாணவர்கள் ஆலோசனை பெறலாம். நீட் தேர்வு விலக்கு மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு ஆளுநருக்கு அனுப்பபட்டுள்ளது. பின் குடியரசு தலைவருக்கு அனுப்பப்படும். மேலும் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க தேவையான முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:  செப்டம்பர் 6 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு – திங்கள் முதல் தளர்வுகள் அமல்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: