தமிழ்நாடு

மின்சார வாரிய ஊழியர்கள் கவனத்திற்கு – புதிய காப்பீடு திட்டம்!!!

தமிழகத்தில் மின்சார வாரிய ஊழியர்களுக்கு புதிய காப்பீட்டு திட்டத்தின் படி 10 லட்சம் ரூபாய் வரை, காப்பீட்டுத் தொகை பெற்றுக் கொள்ளலாம் என அரசு தெரிவித்துள்ளது. மேலும் ஒப்பந்த ஊழியர்களுக்கு இந்த திட்டம் பொருந்தாது என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு அரசு சார்பில் மருத்துவ காப்பீடு வழங்கப்படுகிறது. இதன் மூலம் அவசர மருத்துவ தேவைகளை ஊழியர்களும், அவர்களின் குடும்பத்தினரும் பெறுகின்றனர். கடந்த மாதத்தில் அரசு ஊழியர்களுக்கு புதிய மருத்துவ காப்பீடு திட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்படி காப்பீட்டு திட்டத்தில் 1,169 மருத்துவமனைகள் புதிதாக இணைக்கப்பட்டது. இதில் 203 வகையான சிகிச்சைகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை காப்பீட்டுத் தொகை மூலம் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என அரசாணை வெளியிடப்பட்டது.

தற்போது அமலில் உள்ள அரசு ஊழியர்களின் மருத்துவ காப்பீடு திட்டம் 2025 ஆம் ஆண்டு ஜூன் 25 ஆம் தேதி வரை நான்கு ஆண்டு காலத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அரசின் அனைத்து துறைகளுக்கும் தகவல் அனுப்பப்பட்டது. மற்ற துறைகளை தொடர்ந்து தற்போது மின்சாரத்துறை மின்வாரிய அதிகாரிகள், ஊழியர்களுக்கான புதிய காப்பீட்டுத் திட்டத்தின் வழிகாட்டுதல்களை மின்வாரியம் வெளியிட்டுள்ளது. அதன்படி மின்வாரிய அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரை காப்பீட்டுத் தொகை மூலம் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏற்கனவே மாதந்தோறும் 180 ரூபாய் மருத்துவ காப்பீட்டு தொகையாக பிடித்தம் செய்யப்பட்டது. தற்போது புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் திட்டத்தின் படி மாதந்தோறும் 300 ரூபாய் பிடித்தம் செய்யப்படும் என்றும் அறுவை சிகிச்சைகளுக்கு 10 லட்சம் ரூபாய் வரை காப்பீட்டுத் தொகை மூலம் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒப்பந்த ஊழியர்களுக்கு இந்த திட்டம் பொருந்தாது என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: