தமிழ்நாடு

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் கவனத்திற்கு – விபரங்கள் வெளியீடு!!

தமிழகத்தில் கொரோனா தடுப்புக்கான இரண்டு தவணை தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்டவர்கள் விவரங்களை கொண்ட அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர அரசு சார்பாக கோவாக்சின், கோவிஷீல்டு, ஸ்புட்னிக் போன்ற தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. இதில் கோவாக்சின் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் போட்டுக் கொண்டவர் விவரங்களை மாநில அரசு வெளியிட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் 16-ம் தேதி முதல் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளை கணக்கில் எடுத்து பார்க்கும் போது, தமிழ்நாட்டில் 18 வயதுக்கும் மேற்பட்ட 6, 60,00,000 பேரில் 2,15,00,000 பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர் என்று சொல்லப்பட்டுள்ளது.

இவர்களில் 53,50,000 பேர் மட்டுமே இரண்டாவது தவணை செலுத்தி கொண்டுள்ளனர். அதாவது, ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 9 சதவீதம் பேர் மட்டுமே இரண்டு தவணை தடுப்பூசியும் போட்டுக் கொண்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. முதல் தவணை தடுப்பூசி போட்டுக் கொண்ட 84 நாட்களுக்கு பிறகும், 10,48,575 பேர் இரண்டாவது தவணை கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை என்று மருத்துவ துறை தனது தகவல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதில் அதிகபட்சமாக சென்னையில், 2,97,521 நபர்கள் இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை எனத் தெரியவந்துள்ளது. இதனை அடுத்த வரிசையில் மதுரை , திருச்சி, சேலம், வேலூர் போன்ற மாவட்டங்களில் உள்ள மக்கள் தடுப்பூசியை தவற விட்டுள்ளனர். உரிய நேரத்தில் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத 16 லட்சம் பேர் உள்ளனர். அவர்களுக்கு முன்னுரிமை அளிப்பதற்காக தற்போது 3 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளதாகவும், போட்டு கொள்ள விரும்புவோர் விரைவில் வருமாறு மக்களுக்கு சுகாதாரத்துறை செயலர் அழைப்பு விடுத்துள்ளார்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 உயர்வு!
Back to top button
error: