தமிழ்நாடு

பள்ளி செல்லா குழந்தைகள் கவனத்திற்கு – கணக்கெடுப்பு செப்.20 வரை நீட்டிப்பு!!

தமிழகத்தில் 6-19 வயதுடைய பள்ளி செல்லாத மாணவர்கள் கல்வியில் இருந்து இடை நின்ற மாணவர்களை கணகெடுக்கும் பணியினை 20.09.2021 அன்று வரை தொடர்ந்து நடத்திட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் அனுப்பிய சுற்றறிக்கை ஒருங்கிணைந்த பள்ளிக்‌ கல்வியின்கீழ்‌ 2021-22-ஆம்‌ ஆண்டிற்கான 6-19 வயதுடைய பள்ளி செல்லா / இடைநின்ற குழந்தைகள்‌ மற்றும்‌ மாற்றுத்‌ திறனுடைய குழந்தைகளைக்‌ கண்டறியும்‌ கணக்கெடுப்பு பணி 10.08.2021 முதல்‌ நடைபெற்று வருகிறது. இக்கணக்கெடுப்பு பணிக்கு ஒவ்வொரு மாவட்டத்திற்கும்‌ emis common pool உள்ள மாணாக்கர்களின்‌ விவரங்களை நேரடியாக ஆய்வு செய்யவும்‌, வீட்டு வாரியான கணக்கெடுப்பு நடத்தி பள்ளியில்‌ சேராத குழந்தைகள்‌ மற்றும்‌ புலம்பெயர்ந்த தொழிலாளர்களின்‌ குழந்தைகளை கண்டறிந்து பள்ளியில்‌ சேர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

31.08.2021-க்குள்‌ இக்கணக்கெடுப்பு பணியினை நடத்தி முடிக்க இயலாததால்‌ பார்வையில்‌ கண்ட கடிதத்தில்‌ தெரிவித்துள்ள அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும்‌ முழுமையாக பின்பற்றி இக்கணக்கெடுப்பு பணியினை 20.09.2021 அன்று வரை தொடர்ந்து நடத்திட அனைத்து மாவட்ட முதன்மைக்‌ கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

மேலும்‌, தற்பொழுது 9-ம்‌ வகுப்பு முதல்‌ 12-ம்‌ வகுப்பு வரை 01.09.2021 அன்று பள்ளிகள்‌ திறக்கப்படவுள்ளதால்‌ மாணாக்கர்கள்‌ யாரேணும்‌ பள்ளிக்கு வருகை புரியாமல்‌ இருந்தால்‌, அவர்களை மீண்டும்‌ பள்ளியில்‌ சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக்‌ கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  இன்றைய (27-08-2021) தங்கம், வெள்ளி விலை நிலவரம்!
Back to top button
error: