தமிழ்நாடு

புதிய ரேஷன் கார்டு பெற விண்ணப்பித்தோர் கவனத்திற்கு!!

தமிழகத்தில் ரேஷன் கார்டுகள் வேண்டி விண்ணப்பித்தவர்கள் ரேஷன் கடைகளில் ரேஷன் கார்டு கிடைக்கவில்லை என்றால் தாலுகா அலுவலகங்களில் பெற்றுக்கொள்ளலாம் என உணவு வழங்கல் துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானது முதல் ஏராளமானோர் புதிய ரேஷன் கார்டுகள் வேண்டி விண்ணப்பித்து வருகின்றனர். இதனால் உணவு வழங்கல் துறைக்கு பொதுமக்கள் படையெடுத்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில் விண்ணப்பித்து 15 நாட்களுக்குள் ரேஷன் அட்டை வழங்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து புதிய ரேஷன் கார்டுகளை அச்சிடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து இலவச மளிகை மற்றும் அரசின் கொரோனா நிவாரண நிதி ரூபாய் 4000 ரூபாய் பெறுவதற்காகவும் ரேஷன் கார்டுகளுக்குக்கு விண்ணப்பித்து வருகின்றனர். இதனால் அரசு உத்தரவின் படி 15 நாட்களுக்குள் ரேஷன் கார்டுகளை வழங்க முடியாத நிலை உருவாகியுள்ளது. ஜூலை வரை மொத்தம் 7.19 லட்சம் பேர் புதிதாக ஸ்மார்ட் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்துள்ளனர்.

அதிக விண்ணப்பங்கள் வந்துள்ளமையால் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 9 தாலுகாக்களில் இயங்கி வரும் 1,135 ரேஷன் கடைகளில் கடந்த ஜனவரி மாதத்திற்கு பிறகு புதிய ரேஷன் கார்டுகள் எதுவும் வழங்கப்படவில்லை. அதன் பிறகு இதுவரை மொத்தம், 13189 இந்த புதிய கார்டுகள் வந்துள்ளது அதை விநியோகம் செய்து முடிக்க, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ரேஷன் கடைகளில் ரேஷன் கார்டு கிடைக்கவில்லை என்றால் தாலுகா அலுவலகங்களில் பெற்றுக்கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:  பழைய ஓய்வூதிய திட்டம் அமல்? நிதியமைச்சர் அறிவிப்பு!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: