தமிழ்நாடு

தமிழகம் வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா மீது தாக்குதல் முயற்சி – சென்னையில் பரபரப்பு..!

இன்று சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நடைப்பயணத்தின் போது ஒருவர் அவர் மீது பதாகை கொண்டு தாக்க முயற்சி செய்தார். அவரை பிடித்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றன. இந்த செயல் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை வருகை

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகத்திற்கு பல்வேறு வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட வர இருப்பதாக கூறியிருந்தார். இத்தகைய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட இன்று மதியம் 2 மணியளவில் சென்னை விமானம் நிலையம் வந்தடைந்தார் அமித் ஷா.

amitshah

இவரை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பா.ஜ.க தலைவர் எல்.முருகன் மற்றும் பல அமைச்சர்கள் ஆரவாரத்துடன் வரவேற்றனர். இத்தகைய அன்பு வரவேற்பை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.

தாக்க முயற்சி:

இன்று மதியம் 2 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார் அமித் ஷா. காரில் வந்துகொண்டே இருக்கும் போது மக்களின் வரவேற்பை கண்டு பாதியிலே காரை விட்டு இறங்கி நடைபயணம் மேற்கொண்டார். நடைப்பயணத்தின் போது அமித் ஷாவை காண அவரது தொண்டர்கள் நின்றுகொண்டு இருந்தனர்.

amitshah attack

அப்போது அந்த தொண்டர்களில் ஒருவர் ஆவேசத்துடன் பதாகை கொண்டு தாக்க முயற்சித்தார். அந்த தொண்டரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஏன்? எதற்காக? அமித் ஷா மீதான தாக்குதல் முயற்சியில் ஈடுபட்டார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர். பின்பு அமித் ஷாவை மிக பாதுகாப்புடன் தனியார் ஹோட்டலில் தங்க வைத்தனர்.

loading...
Back to top button
error: Content is protected !!