ஜோதிடம்

இன்றைய ராசிபலன் (26-05-2024)

இன்றைய நாள் (26-05-2024) :

குரோதி-வைகாசி 13-ஞாயிறு-தேய்பிறை

நல்ல நேரம்

காலை 7:30 – 8:30

மாலை 3:30 – 4:30

கௌரி நல்ல நேரம்

காலை 1:30 – 2:30

மாலை 1:30 – 2:30

நட்சத்திரம்

இன்று காலை 11.04 வரை மூலம் பின்பு பூராடம்

சந்திராஷ்டமம் (நட்சத்திரப்படி)

பரணி, கார்த்திகை

சந்திராஷ்டமம் (ராசிப்படி)

மேஷம்

இன்றைய ராசிபலன்:-

மேஷம்

வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். உறவினர்களில் உண்மையானவர்களைக் கண்டறிவீர்கள். அனாவசியச் செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். கனவு நனவாகும் நாள்.

ரிஷபம்

இன்றைய தினம் கொடுக்கல் – வாங்கல் போன்ற விஷயங்களில் பெரிய தொகையை முதலீடு செய்யும் சமயத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ளவும். சில தரகர்களின் பேச்சை ஆராய்ந்து அறிந்து சரி பார்த்து பின்னர் செயல்படுத்தவும். பங்குச் சந்தையில் கூட பெரிய முதலீடுகளை நன்கு யோசித்து திட்டமிட்டுச் செய்யவும். அரசியல்வாதிகள் மேடைப்பேச்சுகளில் அதிக நிதானத்தை கடைபிடிக்க வேண்டிய நாள். உத்யோகத்தில் புதிய பொறுப்புகள் தரப்படலாம். இதனால் வேலை பளு அதிகரிக்க இடமுண்டு. தொழில், வியாபாரத்தில் போட்டியாளர்களின் கைகள் ஓங்கும் நாள்.

மிதுனம்

குடும்பத்திலிருந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். தொழிலில் லாபம் வரும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புதிய மாற்றங்கள் ஏற்படும் நாள்.

கடகம்

எதிலும் வெற்றி பெறுவீர்கள். பழைய சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபார ரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். பெருந்தன்மையுடன் நடந்து கொள்ளும் நாள்.

சிம்மம்

இன்றைய தினம் வேலைச்சுமையால் சோர்வு அடைவீர்கள். அனாவசிய செலவுகளை குறைக்கப்பாருங்கள். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் விட்டுக்கொடுத்துப் போங்கள். கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்.

கன்னி

இன்று கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். பிற்பகலுக்கு மேல் முக்கியமான முடிவுகள் எதையும் இன்று எடுக்க வேண்டாம். பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும், விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. வியாபாரத்தில் விற்பனை வழக்கம் போலவே காணப்படும். உங்கள் முயற்சிகளுக்கு பங்குதாரர்களின் ஆதரவு கிடைக்கும்.

துலாம்

இன்று எதிர்பாராத பணவரவுடன், திடீர் செலவுகளும் ஏற்படும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மாலையில் குடும்பத்துடன் உற்சாகமாகப் பேசி மகிழ்வீர்கள். எதிரிகள் பணிந்து போவார்கள். காரியங்களில் சிறுசிறு தடைகள் உண்டாகும். உறவினர்களால் ஏற்பட்ட மறைமுகத் தொல்லைகள் மறையும். வியாபாரத்தில் பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்புத் தருவார்கள்.

விருச்சிகம்

திட்டவட்டமாக காரியங்களை செய்து சிறப்பாக முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். பணப்பற்றாக்குறையை சமாளிப்பீர்கள். மனதிற்கு இதமான செய்தி வரும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.

தனுசு

இன்று புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்து இடும் சமயத்தில் கூடுதல் கவனத்துடன் இருந்து கொள்ளவும். உத்யோகத்தில் அலைச்சல், டென்ஷன் தவிர்க்க முடியாது. தொழில், வியாபாரத்தில் போட்ட முதலீட்டை எடுக்க அதிகம் பாடு பட வேண்டி இருக்கும். பெண்கள் குடும்பப் பிரச்சனைகளை அந்நிய நபர்களிடத்தில் சொல்ல வேண்டாம். புதிதாக அறிமுகம் ஆகும் நபர்களிடத்தில் கூடுதல் கவனம் தேவை. பொன், நகை, ஆபரணங்களை மட்டும் கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள். மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ளுங்கள். அனைத்துத் தரப்பினருமே எதிர்நீச்சல் போட்டு முன்னேற வேண்டிய நாள்.

மகரம்

குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். புதிய நட்பால் உற்சாகமடைவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். ஆடை ஆபரணம் சேரும். வியாபாரத்தில் புதியசரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.

கும்பம்

உங்களின் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். பிள்ளைகளால் மதிப்பு கூடும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்‌. உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

மீனம்

தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் நிறை குறைகளை எடுத்துச் சொன்னால் கோபப்படாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களிடம் தொழில் ரகசியங்களை சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். உத்தியோகத்தில் ஈகோ வந்து செல்லும். நிதானம் தேவைப்படும் நாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + = twenty one

Back to top button
error: