ஜோதிடம்

இன்றைய ராசிபலன் (22-05-2024)

இன்றைய நாள் (22-05-2024) :

குரோதி-வைகாசி 9-புதன்-வளர்பிறை

நல்ல நேரம்

காலை 9:30 – 10:30

மாலை 4:30 – 5:30

கௌரி நல்ல நேரம்

காலை 10:30 – 11:30

மாலை 6:30 – 7:30

நட்சத்திரம்

இன்று காலை 08.17 வரை சுவாதி பின்பு விசாகம்

சந்திராஷ்டமம் (நட்சத்திரப்படி)

உத்திரட்டாதி

சந்திராஷ்டமம் (ராசிப்படி)

மீனம்

இன்றைய ராசிபலன்:-

மேஷம்

இன்றைய தினம் எண்ணற்ற நல்ல பலன்களை நீங்கள் பெறுவீர்கள். சுப காரிய முயற்சிகளில் இது நாள் வரையில் இருந்து வந்த தடைகள் விலகும். தொழில் அல்லது வியாபாரத்தில், எந்த ஒரு எதிர்ப்புகளையும் சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள். உத்யோகம் வழக்கம் போலவே இருக்கும். உணவு விஷயத்தில் மட்டும் கூடுதல் கட்டுப்பாடு தேவை. சிலர் அசையும், அசையா சொத்துக்களை வாங்கி மகிழ்வார்கள். உற்றார் – உறவினர்கள் ஆதரவு கூட உங்களுக்கு நன்மை தரும். சண்டை போட்டு சென்றவர்கள் கூட சிரித்தபடி வந்து சேருவார்கள். சிலர் தெய்வ தரிசனங்களைக் கூட மேற்கொள்வீர்கள். மொத்தத்தில், பெரும்பாலும் நல்ல பலன்கள் ஏற்படும் நல்ல நாள் இந்த நாள்.

ரிஷபம்

இன்றைய தினம், பொருளாதாரம் நல்ல படியாக மேம்படும். சிலருக்குப் பழைய கடன்கள் கூட அடைபடும். சிலருக்கு வீடு, வாகன யோகம் கூட கிடைக்கப்பெறும். உங்களது வெகு நாள் ஆசைகள் நல்ல படியாக நிறைவேறும். உத்யோகத்தில் இது நாள் வரையில் இருந்து வந்த தடைகள் விலகும். சிலருக்கு விரும்பிய இடமாற்றம், சலுகைகள், சம்பள உயர்வு போன்றவை கூடக் கிடைக்கப்பெறும். சிலர் நல்ல வேலைக்கு மாறுவார்கள். சிலருக்கு உத்யோகத்தில் இருந்து வந்த கெடுபிடிகள் தீரும். சிலருக்கு வெளிநாடு சென்று பணிபுரியும் வாய்ப்பு கூட கிடைக்கப்பெற இடம் உண்டு. புதிதாக வேலை தேடும் அன்பர்களுக்குக் கூட தகுதிக்கு ஏற்ப நல்ல வேலை கிடைக்கப்பெறும். தொழில், வியாபாரம் வெற்றி தரும். சிலர் வேலையை விட்டு சுய தொழில் தொடங்குவீர்கள். இது ஒரு நல்ல நாள்.

மிதுனம்

இன்றைய தினம், எண்ணற்ற நல்ல பலன்களை நீங்கள் பெறுவீர்கள். சுப காரிய முயற்சிகளில் இது நாள் வரையில் இருந்து வந்த தடைகள் விலகும். எந்த ஒரு எதிர்ப்புகளையும் சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள். உணவு விஷயத்தில் மட்டும் கூடுதல் கட்டுப்பாடு தேவை. சிலர் அசையும், அசையா சொத்துக்களை வாங்கி மகிழ்வார்கள். உற்றார் – உறவினர்கள் ஆதரவு கூட உங்களுக்கு நன்மை தரும். சிலர் தெய்வ தரிசனங்களைக் கூட மேற்கொள்வீர்கள். தொழில் அல்லது வியாபாரம் சிறப்பாக இருக்கும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். மொத்தத்தில், அனைத்துத் தரப்பினருக்குமே பெரும்பாலும் நல்ல பலன்கள் தான் ஏற்படும்.

கடகம்

இன்றைய தினம், நினைத்த காரியங்கள் எல்லாமும் நல்ல படியாக நடந்தேறும். உடல் ஆரோக்கியம் மேம்படும். தேவை இல்லாத மருத்துவ செலவுகள் குறையும். புதிய சொத்துக்களை வாங்கும் பாக்கியம் சிலருக்கு ஏற்படும். லாபகரமான தொழிலை செய்வீர்கள். சிலருக்கு எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் கூட கிடைக்கப்பெறும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு குறைந்து பணியில் நிம்மதி நிலை ஏற்படும். அதிகாரிகள் ஒத்துழைப்பு மிகச் சிறப்பாக இருக்கும். கடினமான வேலைகளைக் கூட மிகவும் சிறப்பாக செய்து நல்ல பெயரை எடுப்பீர்கள். மாணவர்கள் திறம்பட செயல்படுவீர்கள். சிலர் நல்ல வேலைக்கு மாறுவீர்கள். சிலர் வேலையை விட்டு புதிய தொழிலை சொந்தமாகத் தொடங்குவீர்கள். இப்படியாக அனைத்துத் தரப்பினருக்குமே ஏற்றம் மிகுந்த நல்ல நாள்.

சிம்மம்

உணர்ச்சிப்பூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப் பேசுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். உறவினர், நண்பர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்து கொள்வார்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். அலுவலகத்தில் மரியாதை கூடும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

கன்னி

கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். செலவுகளை குறைக்க திட்டமிடுவீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி உதவுவார். மனநிறைவு கிட்டும் நாள்.

துலாம்

இன்று அலைச்சல் சற்று அதிகமாகக் காணப்படும். பிரயாணங்களை திட்டமிட்டு இனி வரும் நாட்களில் மேற்கொள்ளுங்கள். எந்த ஒரு வேலையையும் ஒரு முறைக்கு இரு முறை சென்று முடிக்க வேண்டி வரலாம். இதனால் உடலில் அவ்வப்போது சோர்வு, அசதி தென்பட இடம் உண்டு. சிலருக்கு அவ்வப்போது சின்னச், சின்ன மருத்துவ செலவுகள் வந்து போகலாம். சிலருக்கு வீடு, வாகனம் தொடர்பாக திடீர் செலவுகள் ஏற்பட இடம் உண்டு. எனினும், இறுதியில் சோதனைகளை சாதனையாக மாற்றுவீர்கள்.

விருச்சிகம்

சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். மனைவி வழியில் மதிக்கப்படுவீர்கள். கல்யாண பேச்சு வார்த்தை வெற்றியடையும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகளை ஏற்பீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

தனுசு

உற்சாகமாக இருப்பீர்கள். பழைய உறவினர்கள், நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். அரசாங்க விஷயம் நல்ல விதத்தில் முடியும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்குப் பாராட்டு கிடைக்கும். அமோகமான நாள்.

மகரம்

குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களை சுற்றி இருப்பவர்களின் சுயரூபத்தைப் புரிந்து கொள்வீர்கள். பிரார்த்தனையை குடும்பத்தினருடன் சேர்ந்து நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். புதுமை படைக்கும் நாள்.

கும்பம்

பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. மகளுக்கு நல்ல வரன் அமையும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். பழைய கடனைத் தீர்க்க புது வழி பிறக்கும். வியாபாரத்தில் புது பங்குதாரரைச் சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.

மீனம்

இன்று சிலருக்குப் பித்த சம்மந்தமான வியாதிகள் ஏற்படலாம். அதனால் உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனத்துடன் இருந்து கொள்ளுங்கள். குறிப்பாக உணவு விஷயத்தில் கூடுதல் கவனத்துடன் இருந்து கொள்ளுங்கள். வெளி இடங்களுக்குச் செல்லும் சமயத்தில் உங்கள் உடமைகளை பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள். தேவை இல்லாத கடன் ஏற்படாமல் இருக்க, செலவுகளை திட்டமிட்டுச் செய்யுங்கள். பிள்ளைகள் வழியில் சிலருக்குத் தேவை இல்லாத செலவுகள் அல்லது மனக் கவலைகள் ஏற்படலாம். மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய தருணம் இது. தொழில், வியாபாரத்தில் நிறைய போட்டிகளைக் கடந்தே நீங்கள் முன்னேறும் படியாக இருக்கும். உத்யோகத்தில் கூட வேலை பளு அதிகரிக்கலாம். மொத்தத்தில் எதிர்நீச்சல் போட்டு முன்னேற வேண்டிய நாள் இந்த நாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 44 = forty nine

Back to top button
error: