ஜோதிடம்

இன்றைய ராசிபலன் (21-07-2024): இந்த ராசியினருக்கு எதிர்பாராத உதவிகள் கிட்டும்..!

இன்றைய நாள் (21-07-2024) :

குரோதி-ஆடி 5-ஞாயிறு-வளர்பிறை

நல்ல நேரம்

காலை 7:45 – 8:45

மாலை 3:15 – 4:15

கௌரி நல்ல நேரம்

காலை 1:45 – 2:45

மாலை 1:30 – 2:30

நட்சத்திரம்

இன்று அதிகாலை 02.49 வரை பூராடம் பின்பு உத்திராடம்

சந்திராஷ்டமம் (நட்சத்திரப்படி)

ரோகிணி

சந்திராஷ்டமம் (ராசிப்படி)

ரிஷபம்

இன்றைய ராசிபலன்:

மேஷம்

குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். புதிய நட்பால் உற்சாகமடைவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். ஆடை ஆபரணம் சேரும். வியாபாரத்தில் புதியசரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.

ரிஷபம்

மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சிலருக்கு திடீர் பொருள்வரவுக்கு வாய்ப்பு உண்டு. வாழ்க்கைத்துணைவழி உறவுகளிடம் எதிர்பார்த்த காரியம் நல்லபடி முடியும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். அலுவலகப் பணிகளை உற்சாகமாகச் செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாகக் கிடைக்கும். பணியாளர்கள் நன்றாக ஒத்துழைப்பார்கள்.

மிதுனம்

இன்று பண வரவுகள் சற்று ஏற்ற இறக்கமாகத் தான் இருக்கும். முடிந்த வரையில் எதிலும் நீங்கள் சிக்கனத்துடன் இருந்து கொள்ளுங்கள். கொடுக்கல், வாங்கல் போன்ற விஷயங்களில் அதிகம் சிந்தித்து செயல்படுங்கள். கொடுத்த கடன் திரும்பி வர இறைவனை அதிகம் வேண்டிக் கொள்ளுங்கள். பண விஷயமாக சிலருடன் வீண் மனஸ்தாபங்கள் வந்து போக இடம் உண்டு. முடிந்த வரையில் பணம் சம்மந்தமாக பிறருக்கு வாக்குறுதி தர வேண்டாம். அதிக தொகையை கையாளும் சமயத்தில் நீங்கள் கூடுதல் கவனத்துடன் இருந்து கொள்ளுங்கள். மற்றபடி, தொழில் அல்லது வியாபாரத்தில் அதிக எதிர்நீச்சல் போட வேண்டி இருக்கும். உத்யோகத்தில் அதிக வேலை பளு தவிர்க்க முடியாது. அலைச்சல் மிக்க நாள்.

கடகம்

திட்டமிட்ட காரியங்களை அலைந்து திரிந்து முடிப்பீர்கள். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். யாரிடமும் உணர்ச்சிவசப்பட்டு பேசாதீர்கள். வழக்கில் அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களின் விவாதம் வேண்டாம். உத்தியோகத்தில் பிரச்சினைகள் வரக்கூடும். நிதானம் தேவைப்படும் நாள்.

சிம்மம்

மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உங்களை சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை தெரிந்து கொள்வீர்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் தேடி வரும். புதுமை படைக்கும் நாள்.

கன்னி

கடந்த கால இனிய அனுபவங்களை நினைவு கூர்ந்து மகிழ்வீர்கள். பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாகும். திடீர் பயணம் உண்டு. வீடு வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். எதிர்பாராத உதவிகள் கிட்டும் நாள்.

துலாம்

சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். சொந்த-பந்தங்கள் தேடி வந்து பேசுவார்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். அனுபவ அறிவால் சாதிக்கும் நாள்.

விருச்சிகம்

குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். உறவினர்களால் ஆதாயம் உண்டு. அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். கனவு நனவாகும் நாள்.

தனுசு

நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். பணப்பற்றாக்குறை நீடித்தாலும் கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும்.பிரபலங்களின் நட்பு கிடைக்கும். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் அமைதி நிலவும். உழைப்பால் உயரும் நாள்.

மகரம்

இன்றைய தினம் சிலருக்குத் தேவை இல்லாத நெருக்கடிகள் எல்லாம் ஏற்பட்டு விலகும். உடல் ரீதியாக அசதி, சோர்வு தென்பட இடம் கொடுக்காதீர்கள். எளிதில் முடிக்க வேண்டிய காரியங்கள் கூட அலைச்சலைத் தரலாம். குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்க இறைவனை வேண்டிக் கொள்ளுங்கள். நெருங்கியவர்களே நிம்மதிக் குறைவை ஏற்படுத்த இடம் உண்டு. நீங்கள் நல்லதாகப் பேசினாலுமே மற்றவர்கள் அதனை தவறாகப் புரிந்து கொள்ள நேரிடலாம். முடிந்த வரையில் பிறர் விஷயங்களில் தலையிடாமல் நீங்கள் உண்டு, உங்களது வேலை உண்டு என்று இருந்து கொள்ளுங்கள். உத்யோகத்தில் அலைச்சல் தென்படும். தொழில் அல்லது வியாபாரத்தில் கூட அதிக எதிர் நீச்சல் போட வேண்டி இருக்கும். கூடுதல் கவனம் தேவைப்படும் நாள்.

கும்பம்

தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகமாகும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். எண்ணங்கள் நிறைவேறும் நாள்.

மீனம்

சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். உங்களிடம் பழகும் நண்பர்கள் உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்தியோகத்தில் மூத்த அதிகாரி முக்கிய அறிவுரையை தருவார்கள். சாதிக்கும் நாள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!