ஜோதிடம்

இன்றைய ராசிபலன் (18-08-2024): இந்த ராசியினருக்கு அதிரடி மாற்றம் உண்டாகும்!

இன்றைய நாள் (18-08-2024) :

குரோதி-ஆவணி 2-ஞாயிறு-வளர்பிறை

நல்ல நேரம்

காலை 7:45 – 8:45

மாலை 1:30 – 2:00

கௌரி நல்ல நேரம்

காலை 10:45 – 11:45

மாலை 1:30 – 2:30

நட்சத்திரம்

இன்று காலை 10.06 வரை உத்திராடம் பின்பு திருவோணம்

சந்திராஷ்டமம் (நட்சத்திரப்படி)

ரோகிணி, மிருகஷீருஷம்

சந்திராஷ்டமம் (ராசிப்படி)

ரிஷபம் / மிதுனம்

இன்றைய ராசி பலன்கள்:-

மேஷம்

மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உங்களை சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை தெரிந்து கொள்வீர்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் தேடி வரும். புதுமை படைக்கும் நாள்.

ரிஷபம்

உங்கள் போக்கில் கொஞ்சம் மாற்றம் செய்வீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். சிலர் உங்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் மரியாதை கூடும். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.

மிதுனம்

இன்று கோபத்தை குறைத்து, பேச்சில் அதிக நிதானத்தை கடைபிடிக்க வேண்டிய நாள். தொழில் அல்லது வியாபாரத்தில், நேரத்திற்கு உண்டு, உறங்க முடியாத நிலை சிலருக்கு இருக்கும். இதனால் அவ்வப்போது உடல் ரீதியாக சோர்வு, ஆயாசம் ஏற்பட இடம் உண்டு. சிலருக்கு சகோதர வகையில் சின்னச், சின்ன சோதனைகள் ஏற்படவும் இடம் உண்டு. திடீர் செலவுகள் கை இருப்பை குறைக்க இடமுண்டு. ஆரோக்கியத்தில் குறிப்பாக அதிக அக்கறை செலுத்த வேண்டி இருக்கும். மற்றபடி தொழில் அல்லது வியாபாரத்தில் எதையும் திட்டமிட்டுச் செய்வது நல்லது. அகலக்கால் வைக்க வேண்டாம். உத்யோகத்தில் வேலை பளு சற்று அதிகரித்தே காணப்படும்.

கடகம்

புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். அக்கம் – பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.

சிம்மம்

பால்ய நண்பர்கள் உதவுவார்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும் வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். புதுவேலை கிடைக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். அரசால் ஆதாயம் உண்டு. உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.

கன்னி

உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும் உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். சொத்துப் பிரச்சனை ஒன்று தீரும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.

துலாம்

மன உளைச்சல், அலைச்சல், டென்ஷன், கோபம் யாவும் நீங்கும். மனதில் நிம்மதி உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டு. கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்தியோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். திடீர் திருப்பம் நிறைந்த நாள்.

விருச்சிகம்

எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பெற்றோரின் விருப்பங்கள் நிறைவேறும். பழைய கடன் பிரச்சனை கட்டுப்பாட்டிற்குள் வரும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மதிப்புக் கூடும் நாள்.

தனுசு

சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். பிள்ளைகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். நெருங்கியவர்களுக்காக சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் சந்தை ரகசியங்களை தெரிந்து கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதை கூடும். சாதித்துக் காட்டும் நாள்.

மகரம்

இன்றைய தினம், நெருங்கியவர்களை அதிகம் அனுசரித்துச் செல்ல வேண்டி இருக்கும். செலவுகள் அதிகரித்துக் காணப்படும். முடிந்த வரையில் எதிலும் நீங்கள் சிக்கனத்துடன் இருந்து கொள்ளுங்கள். கொடுக்கல், வாங்கல் போன்ற விஷயங்களில் அதிகம் சிந்தித்து செயல்படுங்கள். கொடுத்த கடன் திரும்பி வர இறைவனை அதிகம் வேண்டிக் கொள்ளுங்கள். பண விஷயமாக சிலருடன் வீண் மனஸ்தாபங்கள் வந்து போக இடம் உண்டு. முடிந்த வரையில் பணம் சம்மந்தமாக பிறருக்கு வாக்குறுதி தர வேண்டாம். அதிக தொகையை கையாளும் சமயத்தில் நீங்கள் கூடுதல் கவனத்துடன் இருந்து கொள்ளுங்கள். மற்றபடி, தொழில் அல்லது வியாபாரத்தில் அதிக எதிர்நீச்சல் போட வேண்டி இருக்கும். அப்போது தான் அடைய வேண்டிய இலக்கை ஓரளவேனும் உங்களால் அடைய முடியும். உத்யோகத்தில் வேலைப்பளு, அலைச்சல், டென்ஷன் தவிர்க்க முடியாது.

கும்பம்

கணவன்-மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். தாய் வழியில் மதிக்கப்படுவீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். தன்னம்பிக்கை பிறக்கும் நாள்.

மீனம்

சமயோசிதமாகவும் சாதுர்யமாகவும் பேசி காரியம் சாதிப்பீர்கள். பிள்ளைகளால் புகழ், கௌரவம் உயரும். சொத்து வாங்குவது விற்பது லாபகரமாக முடியும். பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் பற்று, வரவு உயரும்.உத்தியோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். தொட்டது துலங்கும் நாள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!