இன்றைய ராசிபலன் (04-05-2024)

 

இன்றைய நாள் (04-05-2024) :

குரோதி-சித்திரை 21-சனி-தேய்பிறை

 

நல்ல நேரம்

காலை 7:30 – 8:30

 

மாலை 4:30 – 5:30

கௌரி நல்ல நேரம்

 

காலை 10:30 – 11:30

மாலை 9:30 – 10:30

நட்சத்திரம்

இன்று இரவு 07.49 வரை பூரட்டாதி பின்பு உத்திரட்டாதி

சந்திராஷ்டமம் (நட்சத்திரப்படி)

புனர்பூசம், பூசம்

சந்திராஷ்டமம் (ராசிப்படி)

கடகம்

இன்றைய ராசிபலன்:-

மேஷம்

எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். உறவினர்கள் வகையில் சிற்சில சங்கடங்களைச் சமாளிக்கவேண்டி வரும். கணவன் – மனைவிக் கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துகொள்வது மகிழ்ச்சி தரும். மற்றவர்களுடன் மனவருத்தம் ஏற்படக்கூடும் என்பதால் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். இன்று நீங்கள் விநாயகரை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.

ரிஷபம்

காரியங்களில் அனுகூலம் உண்டாகும். எதிர்பார்த்த பணம் கிடைக்கும். ஆனால், திடீர் செலவுகளால் கையிருப்பு கரையும். தாய்வழி உறவினர்களுடன் இணக்கமாக நடந்துகொள்வது நல்லது. வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படும். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக்கொள்வதுடன் பாராட்டவும் செய்வார்கள். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களுடன் ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கும். வியாபாரம் ஓரளவுக்கு லாபம் தருவதாக இருக்கும். இன்று நீங்கள் ஆஞ்சநேயரை வழிபடுவது நன்று.

மிதுனம்

தந்தைவழி உறவுகளால் பணவரவுக்கு வாய்ப்பு ஏற்படும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதில் பெரியவர்களின் ஆலோசனை அவசியம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தாய்வழி உறவினர்களால் குடும்பத்தில் சில பிரச்சனைகள் ஏற்படும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்ளவும். வியாபாரத்தில் பணியாளர்களால் தேவையற்ற செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இன்று நீங்கள் சிவபெருமானை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.

கடகம்

சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்ற போராட வேண்டியிருக்கும். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் மறைமுக அவமானம் வந்து நீங்கும். பொறுமைத் தேவைப்படும் நாள்.

சிம்மம்

கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப்போவது நல்லது. அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். வாகனம் தொந்தரவு தரும். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்னைகள் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் விவாதம் வேண்டாம். எதிலும் கவனம் தேவைப்படும் நாள்.

கன்னி

கடினமான வேலையையும் மாறுபட்ட அணுகுமுறையால் முடித்துக் காட்டுவீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக அமையும். தாயாரின் உடல் நிலை சீராகும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் வரும். உத்தியோகத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். மகிழ்ச்சியான நாள்.

துலாம்

எதிர்பாராத செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. ஆனாலும், தேவையான பணம் கையில் இருப்பதால், சமாளித்துவிடுவீர்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த செய்தி கிடைக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். புதிய முயற்சிகளை பிற்பகலுக்குமேல் தொடங்கவும். வியாபாரத்தில் விற்பனை அதிகரிக்கும். அம்பிகையை தியானித்து வழிபட செயல்கள் அனைத்துமே சாதகமாக முடியும்.

விருச்சிகம்

இன்று உற்சாகமாகக் காணப்படுவீர்கள். உறவினர்கள் மூலம் சுப நிகழ்ச்சிக்கான பேச்சுவார்த்தை நல்லபடி முடியும். தாய்வழி உறவுகளால் நன்மை உண்டாகும். எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும். மனதில் துணிச்சலுடன் முடிவெடுக்கும் திறன் அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்தபடியே விற்பனை நடப்பதுடன் லாபமும் கூடுதலாகக் கிடைக்கும். தட்சிணாமூர்த்தியை வழிபட நற்பலன்கள் அதிகரிக்கும்.

தனுசு

தேவையான பணம் கையில் இருக்கும். காரியங்கள் முடிவதில் தாமதம் ஏற்பட்டாலும் முடித்துவிடுவீர்கள். இளைய சகோதரர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும். உறவினர்கள் மூலம் கிடைக்கும் தகவல் மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். இன்று துர்க்கையை வழிபட காரியங்களை வெற்றிகரமாக முடித்துவிட முடியும்.

மகரம்

ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். பெற்றோரின் ஆதரவு பெருகும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வேற்று மதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் உங்களின் புதிய முயற்சி அதிகாரி ஆதரிப்பார். மதிப்புக் கூடும் நாள்.

கும்பம்

மனதில் இனம்புரியாத பயம் வந்துப் போகும். வீட்டிலும் வெளியிலும் மற்றவர்களை அனுசரித்துப் போங்கள். சிலரின் தவறுகளை சுட்டிக்காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும்‌‌. உத்தியோகத்தில் அதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம். கவனம் தேவைப்படும் நாள்.

மீனம்

கடந்த கால இனிய அனுபவங்களை நினைவு கூர்ந்து மகிழ்வீர்கள். பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாகும். திடீர் பயணம் உண்டு. வீடு வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். எதிர்பாராத உதவிகள் கிட்டும் நாள்.

 
Exit mobile version