தமிழ்நாடு

உதவி கால்நடை மருத்துவர் காலிப்பணியிடங்கள் – அரசுக்கு கோரிக்கை!!

தமிழகத்தில் கடந்த பத்து ஆண்டுகளாக காலியாக உள்ள உதவி கால்நடை மருத்துவர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று காங்கிரஸ் மாவட்ட செயல் தலைவர் கவுதம் ஜெயசாரதி அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தில் காலியாக உள்ள கால்நடை மருத்துவர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று கோரி கடந்த ஜூலை மாதம் கால்நடை மருத்துவர்கள் போராட்டம் நடத்தினர். ஏற்கனவே கடந்த 2019 ம் ஆண்டு கால்நடை உதவி மருத்துவர்களுக்கான தேர்வு அறிவிப்பு வெளியானது. அதன்படி எழுத்துத் தேர்வு நடைபெற்று தேர்வு முடிவுகளும் வெளியானது. இந்நிலையில், ஏற்கனவே பணியில் உள்ள தற்காலிக கால்நடை மருத்துவர்களை பணி நியமனம் செய்யமால் புதிய மருத்துவர்களை நியமிக்க கூடாது என்று கூறி வழக்கு தொடரப்பட்டது.

அதனால் தேர்வு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பணி ஆணை வழங்கப்படவில்லை. அதனால் அவர்கள் கால்நடை துறை அமைச்சரிடம் மனு அளித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் பத்து ஆண்டுகளாக காலியாக உள்ள உதவி கால்நடை மருத்துவர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று காங்கிரஸ் மாவட்ட செயல் தலைவர் கௌதம் ஜெயசாரதி கோரிக்கை அரசுக்கு விடுத்துள்ளார்.

மேலும் மருத்துவர்கள் பற்றாக்குறையை சமாளிக்க 2 ஆண்டுகளுக்கு முன் 818 உதவி மருத்துவர்கள் தொகுப்பூதிய ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக நியமிக்கப்பட்டனர். தற்போது கால்நடை துறையில் 780க்கும் மேற்பட்டோர் பணியில் உள்ளன. கடந்த வருடம் 1,141 காலிப்பணியிடங்களில் உதவி மருத்துவர்களை நிரப்ப தேர்வு நடந்தது. ஆனால் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இன்னும் பணி ஆணை வழங்கவில்லை. அவர்களுக்கு உடனடியாக பணி ஆணை வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:  முதல்வர் ஸ்டாலின் பொதுமக்களுக்கு முக்கிய வேண்டுகோள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: