சினிமா

ஆர்யா ஜெர்மனி பெண்ணை ஏமாற்றினாரா? வழக்கில் கைதான இரு நபர்கள் – சிக்கிய முக்கிய ஆதாரம்!!!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரான ஆர்யா ஜெர்மனி பெண்ணை ஏமாற்றியதாக போடப்பட்ட வழக்கில் புதிய திருப்பம் ஒன்று ஏற்பட்டுள்ளது.

தமிழ் திரையுலகில் சாக்லேட் பாய் என்ற அழைக்கப்படுபவர் தான் ஆர்யா. பல ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகராக வலம் வந்தவர். ஆனால் சில ஆண்டுகளாக அவருக்கு வாய்ப்புகள் எதுவுமே கிடைக்கவும் இல்லை. ஏற்கனவே இவருக்கு பெண் பார்க்கிறேன் என்று ஒரு நிகழ்ச்சியில் சுயம் வரம் நடத்தினார். கடைசியில் யாரையுமே திருமணம் செய்யாமல் ஏமாற்றினார். அதுவே அவர் மீது கசப்புணர்வை ஏற்படுத்தியது.

இந்நிலையில் கடந்த வருடம் ஆர்யா, ஜெர்மனி பெண்ணை ஏமாற்றியதாக வழக்கு தொடுக்கப்பட்டது. அதில் சொல்லப்பட்டிருந்ததாவது, ஆர்யா ஆசை வார்த்தைகள் சொல்லி திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றியதாகவும், அதே நேரத்தில் அவரிடம் இருந்து லட்சக்கணக்கில் பணம் பறித்ததாகவும் சொல்லப்பட்டது. ஆனால் ஆர்யா சைடில் இருந்து எந்த விதமான எதிர்ப்பும் வரவே இல்லை.

arya sayesha.1.346505 2

இது உண்மையா? பொய்யா?? என்ற தகவலையும் அவர் குறிப்பிடவில்லை. இப்பொழுது இந்த வழக்கு வேறு விதமாக திரும்பியுள்ளது. அதாவது ஆர்யா பெயரை சொல்லி முகமது அர்மான், உசைனி என்ற இருவர் தான் இந்த வேலையை செய்துள்ளதாக போலீசார் இந்த வழக்கை முடித்துள்ளனர். அதாவது சமூக வலைத்தளத்தில் பெண்களிடம் ஆசை வார்த்தை பேசி மயக்கும் கும்பல் ஒன்று ஆர்யாவின் பெயரை பயன்படுத்தியுள்ளனர்.

bk21

ஆர்யாவின் புகைப்படத்தை பார்த்து அந்த பெண்ணும் ஏமாந்து இருக்கிறார். போலீசார் அந்த சமூக வலைத்தளங்களை பற்றி விசாரித்த பொழுது இந்த இருவரும் சிக்கியுள்ளனர். மேலும் பண பரிவர்த்தனையில் ஆர்யாவின் பெயர் வருவது போன்றும் செட் செய்துள்ளனர். அதனால் தான் அந்த ஜெர்மனி பெண்ணும் ஆர்யா என்று நம்பியுள்ளாராம்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  மீரா மிதுனுக்கு காவல் நீட்டிப்பு!
Back to top button
error: