இந்தியா

வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் 5,000 ரூபாய் உதவித்தொகை.. அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு!

உத்தரகண்டில் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால், வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் 5,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

உத்தரகண்ட் மாநிலத்தில் புஷ்கர் சிங் தாமி தலைமையில் பா.ஜ.க, ஆட்சி நடைபெறுகிறது. அங்கு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் அங்கு சட்டசபை பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. டெல்லியை ஆளும் ஆம் ஆத்மி கட்சியும் உத்தரகண்ட் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற ஆசைப்படுகிறது. கடந்த சில மாதங்களில் மட்டும் 3 முறை உத்தரகண்ட் மாநிலத்திற்கு வந்து பொதுக் கூட்டங்கள், பத்திரிகையாளர்கள் சந்திப்புகளை கெஜ்ரிவால் நடத்தியுள்ளார்.

இதையும் படிங்க:  ஜம்மு-காஷ்மீர் எல்லைக்குள் ஊடுருவும் டிரோன்கள்.. சுட்டு வீழ்த்த பாதுகாப்புப் படையினருக்கு உத்தரவு!

இந்நிலையில் நேற்று நடந்த பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக வந்த கெஜ்ரிவால், மாநில வேலைவாய்ப்பில் 80 சதவீதம் உத்தரகண்ட்டில் வசிப்பவர்களுக்காக ஒதுக்கீடு செய்யப்படும் என உறுதியளித்தார்.

வேலைவாய்ப்புகளை தேட இணையதளம் தொடங்கப்படும் என்றும், டெல்லியில் இதுப்போன்ற இணைய போர்ட்டல் மூலம் 10 லட்சம் பேர் வேலைப் பெற்றார்கள் என தெரிவித்தார். மேலும் வேலைவாய்ப்பு மற்றும் புலம்பெயர் தொழிலாளர் விவகாரங்கள் துறை அமைச்சகம் உருவாக்கப்படும் என்றும் அப்போது அவர் வாக்குறுதி அளித்தார்.

இதையும் படிங்க:  இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 30,256 பேருக்கு கொரோனா!

உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: