இந்தியா

கடுங்குளிரால் நடுங்கும் உயிரினங்கள்.. வெப்பமூட்டி வசதி ஏற்பாடு!!

உத்தரப்பிரதேசத்தில் இரவு நேரத்தில் கடுங்குளிர் நிலவுவதால், லக்‍னோ உயிரியல் பூங்காவில் உள்ள உயிரினங்களுக்‍கு வெப்பமூட்டி வசதி செய்து தரப்பட்டுள்ளது.

வடமாநிலங்களில் கடுங்குளிரை சமாளிக்‍க முடியாமல் மக்‍கள் தவித்துவரும் சூழலில், உயிரியல் பூங்காக்‍கள் மற்றும் சாலைகளில் உள்ள விலங்குகள் குளிரை சமாளிக்‍க முடியாமல் போராடி வருகின்றன.

இந்நிலையில், லக்னோ உயிரியல் பூங்காவில், வெப்பமூட்டிகளைப் பயன்படுத்தி உயிரினங்களுக்‍கு கதகதப்பான சூழல் உருவாக்‍கப்பட்டுள்ளது.

குளிர்காலச் சூழலுக்‍கு ஏற்ப, உயிரினங்களுக்‍கு அதிக ஊட்டச்சத்துள்ள உணவுகள் வழங்கப்பட்டு வருவதாகவும் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, வடகிழக்‍கு மாநிலங்களில் ஒன்றான அசாமில், காசிரங்கா உயிரியல் பூங்காவில் வளர்க்‍கப்படும் யானைக்‍ குட்டிகளை, குளிரிலிருந்து காப்பாற்ற, அவற்றுக்‍கு போர்வை போர்த்தப்பட்டுள்ளது. குளிரிலிருந்து யானை குட்டிகளை காக்‍க, பூங்கா பணியாளர்கள், அவற்றுக்‍கு போர்வை போர்த்தும் காட்சி வெளியாகிவுள்ளது.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: