தமிழ்நாடுமாவட்டம்

அரியர் தேர்வு ரத்து.. ஏற்க முடியாது.. கோர்ட் அதிரடி அறிவிப்பு..!

அரியர் தேர்வுகளை ரத்து செய்து பிறப்பிக்‍கப்பட்ட உத்தரவை ஏற்க இயலாது என்றும், தேர்வு நடத்துவது குறித்து பரிசீலிக்க வேண்டும் எனவும், தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததை அடுத்து, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அரியர் தேர்வை ரத்து செய்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணையில், அரியர் தேர்வுக்கு கட்டணம் செலுத்தியவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதனை ரத்து செய்யக்‍கோரி, அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் திரு.பாலகுருசாமி, திருச்செந்தூரை சேர்ந்த வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்குகள் தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரியர் தேர்வு எழுத கட்டணம் செலுத்தினால் தேர்ச்சி என்ற அரசின் உத்தரவை ஏற்க இயலாது என்று தெரிவித்த நீதிபதிகள், ஏதேனும் தேர்வு நடைமுறையை மேற்கொள்வது குறித்து பரிசீலிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு அறிவுறுத்தினர்.

மேலும் தமிழகம் முழுவதும் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் வாரியாக எத்தனை மாணவர்கள் அரியர் தேர்வுக்கு விண்ணப்பித்தனர் என்பது குறித்தும், எத்தனை மாணவர்கள் தேர்ச்சி அடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்தும் முழுமையான விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை வரும் 15-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: