தமிழ்நாடுமாவட்டம்

நாளை (01-12-2021) மின்தடை ஏற்படவிருக்கும் பகுதிகள்!

கோவை மாவட்டத்தில் சில பகுதிகளில் உள்ள துணை மின் நிலையங்களில் நாளை மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின் விநியோகம் தடை செய்யபடும் என்று மின் வாரியம் தெரிவித்துள்ளது.

மாதாந்திர மின் பராமரிப்பு அனைத்து மாவட்டங்களிலும் உள்ள துணை மின் நிலையங்களிலும் தவறாது பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. மின் பராமரிப்பின் போது மின் கம்பங்களின் அருகே மின் விநியோகத்திற்கு இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றப்படுகிறது. மின் கம்பிகள், வயர்கள் மாற்றம் செய்யப்பட்டு மின் பயனர்களுக்கு தடையில்லா மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

அதன்படி, நாளை கோவை மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. அதனால் கள்ளப்பாளையம், பீடம்பள்ளி, சின்ன கலங்கல், பாப்பம்பட்டி, நாகம நாயக்கன் பாளையம், செல்வபுரம், கண்ணம்பாளையம், நடுப்பாளையம் மற்றும் பள்ளபாளையம் ஆகிய பகுதிகளில் டிசம்பர் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

  செப்.23ம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!!
Back to top button
error: