தமிழ்நாடு

நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (21.08.2021) சனிக்கிழமையன்று மின்தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மாதந்தோறும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். இதன் மூலம் மின் நிலையங்களிலும் மின் கம்பிகள் மாற்றப்பட்டு, மின் இணைப்புகள் சரிபார்க்கப்படுகிறது. இதன் மூலம் மின் நுகர்வோருக்கு பாதுகாப்பான மின் விநியோகம் தடை செய்யப்பட்டுகிறது. தற்போது மாவட்டம் வாரியாக மின் பரமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மற்ற மாவட்டங்களை தொடர்ந்து சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நாளை (21.08.2021) காத்தான், ஆவுடைபொய்கை, சிறுவயல் ஆத்தங்குக்குடி, பலவான் குடி, சூரக்குடி, நங்கம்பட்டி, நேற்புகப்பட்டி, நேமத்தான் பட்டி, சொக்கலிங்கபுதூர், திருவேலங்குடி, ஆகிய கிராமபுற பகுதிகளிலும், மேல பூங்குடி, மின் தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து கீழபூங்குடி, கீழ புதுப்பட்டி, வெற்றியூர், மேலபட்டமங்கலம், சொக்கநாதபுரம், புளியன்குடிபட்டி, சிலந்தகுடி, செவரக்கோட்டை, ஆளவிளாம்பட்டி, கருங்குளம், நால்ரோடு, தண்ணீர் பந்தல் ஆகிய பகுதிகளில் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:  17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: