தமிழ்நாடு

செப்.23ம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!!

தக்கலை உப மின் நிலையம் மற்றும் உயர் அழுத்த மின்னழுத்த பாதைகளில் அவசர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் செப்.23ம் தேதி மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் குறித்த விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

தமிழகம் முழுவதும் ஊரடங்கு காலத்தில் அனைத்து மாவட்டங்களிலும் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி மின்தடை செய்யப்பட்டது. இது குறித்து விளக்கமளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 9 மாதங்களாக அதிமுக ஆட்சியில் மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. அதனை தொடர்ந்து மின் சம்பந்தப்பட்ட புகார்களை கவனிக்க மின் புகார் மையங்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது என கூறியுள்ளார்.

கடந்த மாதங்களில் நடைபெற்ற மின் பராமரிப்பு பணிகளுக்கு பிறகு மாதந்தோறும் தவறாது அனைத்து மாவட்டங்களிலும் உள்ள துணை மின் நிலையங்களிலும் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் மின் விநியோகம் தடை செய்யப்பட்டு வருகிறது என கூறினார். மற்ற பகுதிகளை தொடர்ந்து தக்கலை உப மின் நிலையம் மற்றும் உயர் அழுத்த மின்னழுத்த பாதையில் அவசர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் வியாழக்கிழமை (செப்.23ம் தேதி) காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி மின் விநியோகம் தடை செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.

எனவே நாளை மணலி, தக்கலை, பத்மநாபபுரம், குமாரகோவில், வில்லுக்குறி, புலியூா்குறிச்சி, அப்பட்டுவிளை, பரசேரி,ஆளூா், வீராணி, தோட்டிக்கோடு, கேரளபுரம், திருவிதாங்கோடு, வட்டம், ஆலங்கோடு, மங்காரம், புதூா், சேவியர் புரம், பரைக்கோடு, அழகியமண்டபம், முளகுமூடு, கோழிப்போா்விளை, காட்டாத்துறை, சுவாமியாா்மடம், கல்லுவிளை, மூலச்சல், பாலப்பள்ளி, சாமிவிளை, மேக்காமண்டபம், செம்பருத்திவிளை, மணலிக்கரை, மணக்காவிளை, சித்திரங்கோடு, குமாரபுரம், பெருஞ்சிலம்பு, முட்டைக்காடு, சரல்விளை ஆகிய பகுதிகளுக்கும், அதைச் சார்ந்த துணை கிராமங்களுக்கும் மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய தக்கலை கோட்ட செயற்பொறியாளர் கூறியுள்ளார்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  32 சுங்கச் சாவடிகள் குறைப்பு – அமைச்சர் வலியுறுத்தல்!!
Back to top button
error: