தமிழ்நாடு

செப்.10ம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!!

தமிழகத்தில் ஆங்காங்கே மின் பராமரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழகம் முழுவதும் மின் தொடர்பான குறைகளை நிவர்த்தி செய்ய மின் புகார் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மின் தொடர்பான பிரச்சனைகள் 2 நாட்களில் சரி செய்யப்படும் என்று மின்சாரத் துறை தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் மாதந்தோறும் மின் கட்டணம் செலுத்தும் முறை கொண்டு வரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் ஊரடங்கு காலத்தில் அனைத்து மாவட்டங்களிலும் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி மின்தடை செய்யப்பட்டது. இது தொடர்பாக மின் வாரியத்தில் புகார்கள் குவிந்தன. இது குறித்து விளக்கமளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 9 மாதங்களாக அதிமுக ஆட்சியில் மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. அதனால் தற்போது மாவட்ட வாரியாக மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. இதனால் மின் விநியோகம் தடை விதிக்கப்பட்டு வருகிறது என விளக்கமளித்தார். அதனை தொடர்ந்து மாதாந்திர மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் துணை மின் நிலையத்தில் நடைபெற்று வருகிறது.

மற்ற மாவட்டங்களை தொடர்ந்து நாளை சிவகாசி மின்கோட்டத்தைச் சோ்ந்த செவல்பட்டி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. இதனால் அந்த துணை மின் நிலையத்திலிருந்து மின்வசதி பெறும் அப்பையநாயக்கன்பட்டி, அக்கரைப்பட்டி, குறுஞ்சோலை, ஜக்கம்மாள்புரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படும். எனவே காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: