
தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் (NAPS) கீழ் தமிழக அரசின் மின்சார துறையின் கட்டுப்பாட்டில் செயலாற்றும் மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகத்தின் (TANGEDCO) கடலூர் அலுவலகத்தில் காலியாக உள்ள Electrician பணியிடங்களை நிரப்பிட தற்போது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் இந்த அரசு பணியிடத்திற்கான பதிவுகளை மேற்கொள்ளலாம். அதற்கான தகுதிகளை கீழே எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு அதன் பின்னர் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
பணியிடங்கள் :
TANGEDCO கழகத்தில் Electrician பணிகளுக்கு என 10 காலியிடங்கள் Apprenticeship India மூலம் ஒதுக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி :
விண்ணப்பதாரர்கள் 10ம் வகுப்பில் Science and Mathematics பாடங்களில் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானதாகும், இந்த பணிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான தகுதியினை பெற்று விடுவர். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வாயிலாக அறிந்து கொள்ளலாம்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.7,000/- முதல் அதிகபட்சம் ரூ.9,000/- வரை ஊதியம் பெற்றுக் கொள்வர்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் விரைவில் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
Apply Online – https://apprenticeshipindia.org/apprenticeship/opportunity-view/602a0aa48efcd759bc004e95