தமிழ்நாடு

JIPMER பல்கலைக்கழக வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்..

ஜவஹர்லால் இன்ஸ்டிடியூட் ஆப் முதுகலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகமான JIPMER பல்கலைக்கழகத்தில் இருந்து அதன் காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான புதிய பணியிட அறிவிப்பை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் Senior Resident பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பித்துக் கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம்.

காலியிடங்கள் :

Senior Resident பணிக்கு என 78 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

அதிகபட்சம் 45 வயது வரை உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி பெறுவர்.

கல்வித்தகுதி :

அரசு/ மருத்துவ கவுன்சில் அங்கீகாரம் பெற்ற மருத்துவ கல்லூரிகளில் Postgraduate Medical Degree MD/ MS/ DNB தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் அதிகபட்சம் ரூ.67,700/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Written Examination/ Interview/ Merit List ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். 02.03.2021 & 03.03.2021 ஆகிய தேதிகளில் காலை 8:30 மணிக்கு மேற்கூறப்பட்ட தேர்வு நடைபெற உள்ளது.

விண்ணப்பக் கட்டணம் :

General (UR)/ OBC/ EWS விண்ணப்பதாரர்கள் – ரூ.500/-
SC/ ST விண்ணப்பதாரர்கள் – ரூ.250/-
PWD விண்ணப்பதாரர்கள் – கட்டணம் செலுத்த தேவை இல்லை

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 02.03.2021 மற்றும் 03.03.2021 ஆகிய தினங்களில் ஜிப்மர் கல்வி மையம், ஜிப்மர், புதுச்சேரி என்ற முகவரியில் நடைபெற உள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Official PDF Notification – https://www.jipmer.edu.in/sites/default/files/Advertisement%20%282%29.pdf

Application Form – https://www.jipmer.edu.in/sites/default/files/Application%20Form_2.pdf

Back to top button
error: Content is protected !!