இந்தியாதமிழ்நாடு

DRDO நிறுவனத்தில் ரூ.54 ஆயிர ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்..

மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் DRDO நிறுவனம் ஆனது தகுதியானவர்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பினை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது. அந்நிறுவனத்தின் அறிவிப்பில் Research Associate (RA) [Electronics], Junior Research Fellow (JRF) பணிகளுக்கு திறமையானவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பணியிடங்கள் :

DRDO நிறுவனத்தில் Research Associate & Junior Research Fellow (JRF) பணிகளுக்கு என மொத்தமாக 10 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

  • Research Associate – 35 வயதிற்கு மிகாமல்
  • JRF – 28 வயதிற்கு மிகாமல்

கல்வித்தகுதி :

Research Associate – PhD in Electronics/ Microwaves அல்லது M.E./M. Tech in Electronics, Communication, Microwaves and RF தேர்ச்சியுடன் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.

Junior Research Fellow (JRF) – B.E. / B.Tech உடன் GAbTE score அல்லது M.E. / M.Tech in Electronics & Communication Engineering, Computer Science Engineering, Mechanical Engineering, Electrical & Electronics Engineering தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

குறைந்தஅட்சம் ரூ.31,000/- முதல் அதிகபட்சம் ரூ.54,000/- வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் அனைவரும் Interview மூலமாக தேர்வு செய்யப்படவுள்ளனர். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பக் கட்டணம் :

  • General/ OBC விண்ணப்பதாரர்கள் – ரூ.10/-
  • SC/ ST/ OBC விண்ணப்பதாரர்கள் –கட்டணம் இல்லை

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 20.04.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Official PDF Notification – https://rac.gov.in/download/advt_ade_jrfra_2021.pdf

Apply Online – https://rac.gov.in./index.php?lang=en&id=0

இதையும் படிங்க:  இன்றைய ராசிபலன் (06.05.2021)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: