இந்தியா

இந்திய யுரேனிய கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்..

மத்திய அரசின் பொது நிறுவனங்கள் தேர்வு வாரியத்தில் (PESB) இருந்து யுரேனியம் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (UCIL) நிறுவனத்தில் காலியாக உள்ள Director (Finance) பணிக்கு அதிகாரப்பூர்வ பணியிட அறிவிப்பானது தற்போது வெளியாகி உள்ளது. அதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே எங்கள் வலைப்பதிவின் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.

பணியிடங்கள்:

Director (Finance) பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

குறைந்தபட்சம் 40 முதல் அதிகபட்சம் 60 வயது வரை உள்ளவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

கல்வித்தகுதி :

அங்கீகாரத்துடன் செயல்படும் கல்வி நிலையம்/ பல்கலைக்கழகங்களில் MBA/PGDM course தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.

Central Government/ Armed Forces of the Union/ All India Services போன்ற பணிகளில் 7 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது Corporate Financial Management/ Corporate Accounts பணிகளில் 10 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.1,60,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,90,000/- வரை ஊதியம் பெற்றுக் கொள்வர்.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Interview ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் வரும் 26.04.2021 அன்றுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.

Official PDF Notification – https://drive.google.com/file/d/12PKlLWEfgwOgjLmbHrCpuBdZivKXfZ0y/view?usp=sharing

Official Site – https://pesb.gov.in/Home/Vacancies

Back to top button
error: Content is protected !!