தமிழ்நாடுமாவட்டம்

கோயம்புத்தூர் ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. தவறாம உடனே விண்ணப்பியுங்கள்..

கோயம்புத்தூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் லிமிடெட்டில் இருந்து ஆவின் காலிப்பணியிடங்களுக்கு புதிய பணியிட அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் Driver, Technician & Deputy Manager பணிகளுக்கு என காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த பணியிடங்களை நிரப்பிட தகுதியானவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனவே விரைவாக இந்த பணிகளுக்கு திறமையுள்ளவர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

பணியிடங்கள் :

Driver, Technician & Deputy Manager பணிகளுக்கு என 09 காலியிடங்கள் ஆவின் நிறுவனத்தில் நிரப்பப்படாமல் உள்ளது.

வயது வரம்பு :

Driver மற்றும் Technician பணிகளுக்கு விண்ணப்பிப்போர் அதிகபட்சம் 32 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :

Deputy Manager – CS/ IT பாடப்பிரிவில் BE/ B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது MCA பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Driver – 8ம் வகுப்பு தேர்ச்சியுடன் LMV வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று இருங்க வேண்டும். மேலும் இப்பணியில் 3 வருட முன் அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.

Technician (Lab) – 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் Lab Technician பிரிவில் Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ரூ.19,500/- முதல் அதிகபட்சம் ரூ.1,13,500/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

Written Exam & Interview/ Driving Ability Test மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் 22.02.2021 அன்றுக்குள் பொது மேலாளர், கோவையில் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் லிமிடெட், புதிய பால் வளாகம், பச்சபாளையம் , கலாம்பாளயம், கோவை -641010 என்ற முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை உரிய சான்றுகளுடன் அனுப்பிட வேண்டும்.

Official PDF Notification – https://aavinmilk.com/documents/20142/0/Application%202021-9%20posts-04.02.2021%20(1).pdf

Back to top button
error: Content is protected !!