தமிழ்நாடுஇந்தியாமாவட்டம்

12ம் வகுப்பு தேர்ச்சியா?.. இந்திய அணுசக்தி கழகத்தில் வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்..

மத்திய அரசு நிறுவனங்களில் ஒன்றான நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் Scientific Assistant (Safety Supervisor), leading Fireman, Driver, Assistant (HR), Assistant (F&A), Assistant (C&MM), Stenographer பணிகளுக்கு என காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து இப்பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை கீழே எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்துக் கொள்ளலாம்.

பணியிடங்கள் :

இந்திய அணுசக்தி கழகத்தில் Scientific Assistant (Safety Supervisor), leading Fireman, Driver, Assistant (HR), Assistant (F&A), Assistant (C&MM), Stenographer பணிகளுக்கு என 59 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

23.02.2021ம் தேதியினை பொறுத்து குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 35 வயது வரை உள்ளவர்கள் பதிவு செய்து கொள்ளலாம்.

கல்வித்தகுதி :

Scientific Assistant :

Diploma in Engineering அல்லது B.Sc தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணியில் 04 வருட அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.

Leading Fireman :

12வது தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானதாகும்.
மேலும் இப்பணிகளில் 08 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.

Driver-cum-Pump operator-cum-Fireman :

12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஒரு வருட காலமாவது பணியில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Assistant (HR) – Science or Commerce or Arts பாடப்பிரிவில் Bachelor’s Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Assistant (F & A) – Bachelor’s Degree in Commerce முடித்திருந்தால் போதுமானது.

Assistant (C&MM) – Bachelor’s Degree in Science பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுவோர்க்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.25,500/- முதல் அதிகபட்சம் ரூ.44,900/- வரை ஊதியம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :

Typewriting Test
Computer Proficiency Test
Stenography test

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் 23.02.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இப்பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Online Application – https://npcilcareers.co.in/MainSite/default.aspx

Official Notification PDF – https://drive.google.com/file/d/1mUZvDQhWaITaHZaldXwD7ze2qY3CgrjC/view?usp=sharing

Official Site – https://npcilcareers.co.in/MainSite/default.aspx

Back to top button
error: Content is protected !!