வேலைவாய்ப்பு

மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்..!

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலிருந்து வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Office Assistant பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Office Assistant பணிக்கு 12 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அனுமதிபெற்ற கல்வி நிலையங்களில் அல்லது கல்லூரிகளில் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது ஆகும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 18 எனவும் அதிகபட்சம் 37 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகள் குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறது. 22.12.2021 தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகவரி:- வருவாய் பிரிவு, கலெக்டர் அலுவலகம், மயிலாடுதுறை.

அதிகாரபூர்வ அறிவிப்பு – https://cdn.s3waas.gov.in/s33871bd64012152bfb53fdf04b401193f/uploads/2021/12/2021120774.pdf


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

  ஆயுத தொழிற்சாலை வேலை - தேர்வு எழுத தேவையில்லை!!
Back to top button
error: