இந்தியாதமிழ்நாடு

மத்திய மீன் வளர்ப்பு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்..

இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் (ICAR) கட்டுப்பாட்டில் இயங்கும் மத்திய உப்புநீர் மீன் வளர்ப்பு நிறுவனம் ஆன CIBA நிறுவனத்தில் இருந்து பணியிட அறிவிப்பு ஆனது வெளியாகியுள்ளது. அந்த மத்திய அரசு நிறுவன அறிவிப்பில் Young Professional-I, Senior Research Fellow, Laboratory Assistant & Field Assistant பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தகுதியும் திறமையும் வாய்ந்தவர்கள் இந்த பணிகளுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

பணியிடங்கள் :

Young Professional-I, Senior Research Fellow, Laboratory Assistant & Field Assistant பணிகளுக்கு 05 காலிப்பணியிடங்கள் ஓதுக்கப்பட்டுள்ளன.

வயது வரம்பு :

  • Young Professional-I பணிகள் – 21 முதல் 45 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்
  • மற்ற பணிகள் – அதிகபட்சம் 35 வயதிற்குள் இருக்கும் ஆண் விண்ணப்பதாரர்கள் அல்லது 40 வயதிற்குள் இருக்கும் பெண் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித்தகுதி :

10 ஆம் வகுப்பு தேர்ச்சி/ அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில் பணி சம்பத்தப்பட்ட பாடங்களில் B.Sc./ B.F.Sc./ M.F.Sc./ M.V.Sc./ M.Sc. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

குறைந்தபட்சம் ரூ.12,000/- முதல் அதிகபட்சம் ரூ.31,000/- வரை சம்பளம் வழங்கப்பட இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். Young Professional – I பணிக்கு 09.03.2021 அன்றும் மற்ற பணிகளுக்கு 03.03.2021 அன்றும் நேர்காணல் சோதனை நடைபெறவுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களின் விண்ணப்பங்களை வரும் 27.02.2021 அன்றுக்குள் மற்ற பணிகளுக்கும் மற்றும் 05.03.2021 அன்றுக்குள் Young Professional-I பணிக்கும் சமர்ப்பிக்க வேண்டும்.

Official PDF Notification 1 – http://www.ciba.res.in/wp-content/uploads/2021/02/Notification-of-Walk-in-Interview-under-NASF-Project-at-KRC.pdf

http://www.ciba.res.in/wp-content/uploads/2021/02/Notification-Application-ABI-ITMU-Project.pdf

Back to top button
error: Content is protected !!