தமிழ்நாடுமாவட்டம்

10ம் வகுப்பு தேர்ச்சியா? தமிழக ஊராட்சி துறையில் வேலை.. உடனே விண்ணப்பியுங்கள்..

திருவண்ணாமலை மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை மற்றும் ஊராட்சி அலகில் காலியாக உள்ள பதிவறை எழுத்தர் பணியிடங்களை நிரப்ப டிசம்பர் 30 ஆம் தேதி வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியானது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க 28.01.2021 இறுதி நாள் என்பதால், ஆர்வமுள்ளவர்கள் காலதாமதிக்காமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

பதிவறை எழுத்தர் பணிகளுக்கான வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • பதிவறை எழுத்தர் பதவிக்கு 2 பணியிடங்கள் திருவண்ணாமலை மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையில் காலியாக உள்ளன.
  • 01.07.2020 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் இருக்க வேண்டும். மேலும் பொதுப்பிரிவு, BC/ MBC மற்றும் SC/ST பிரிவினர் அதிகபட்சம் வயதானது 30,32 மற்றும் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
  • விண்ணப்பத்தார்கள் அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • பதிவு செய்யும் விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
  • அவ்வாறு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.15,900/- முதல் அதிகபட்சம் ரூ.50,400/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தமிழக மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து 28.01.2021 க்குள் பிற்பகல் 5.00 மணிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Official PDF Notification – Click Now

Official Website – https://tiruvannamalai.nic.in/

Back to top button
error: Content is protected !!