தமிழ்நாடுமாவட்டம்

8ம் வகுப்பு தேர்ச்சியா? தமிழக அரசு வேலை.. உடனே விண்ணப்பியுங்கள்..

தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட தற்போது மாவட்ட வாரியாக அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. அதன்படி, தற்போது வேலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் DEO, Cook & Counsellor பணிகளும், சிவகங்கை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகதத்தில் Counsellor பணிகளும் காலியாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அவற்றிக்கு கீழே வழங்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு பதிவாளர்களை கேட்டுக் கொள்கிறோம்.

காலிப்பணியிடங்கள் :

மொத்தமாக 07 பணியிடங்கள் காலியாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலூர் – 05 பணியிடங்கள்
சிவகங்கை – 02 பணியிடங்கள்்

வயது வரம்பு :

அதிகபட்சம் 32-40 வயதிற்கு மிகாதவர்கள் மட்டுமே இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க இயலும்.

கல்வித்தகுதி :

  • Data Entry Operator/Assistant – 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் DCA மற்றும் Typing தெரிந்திருக்க வேண்டும். மேலும் பணியில் 01 ஆண்டு முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • Cook – 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது ஆகும்.
  • Counsellor – Psychology பாடப்பிரிவில் PG பட்டம் முடித்திருத்தல் அவசியமானதாகும்.

ஊதிய விவரம் :

  • Data Entry Operator/Assistant – ரூ.9,000/-
  • Cook – ரூ.10,000/-
  • Counsellor – ஒரு வருகைக்கு ரூ.1,000/-

தேர்வு செயல்முறை :

பதிவுதாரர்கள் Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் 05.02.2021 அன்றுக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Sivagangai PDF Notification – https://cdn.s3waas.gov.in/s31a5b1e4daae265b790965a275b53ae50/uploads/2021/01/2021012267.pdf

Vellore Notification – https://vellore.nic.in/notice_category/recruitment/

Back to top button
error: Content is protected !!