தமிழ்நாடுமாவட்டம்

தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்..

தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகத்தின் (TNSTC) விழுப்புரம் பகுதி அலுவலகத்தில் புதிய வேலைவாய்ப்பிற்கான அறிவிப்பு ஆனது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் Welder (Gas & Electric) பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாகவும் அதற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அவற்றின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ள கேட்டுக் கொள்கிறோம்.

காலியிடங்கள்:

TNSTC கழகத்தில் Welder (Gas & Electric) பணிகளுக்கு என 06 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :

விண்ணப்பதாரர்கள் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானதாகும், இந்த பணிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான தகுதியினை பெற்று விடுவர். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.7,000/- முதல் அதிகபட்சம் ரூ.10,000/- வரை ஊதியம் பெற்றுக் கொள்வர்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் விரைவில் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Apply Online – https://apprenticeshipindia.org/apprenticeship/opportunity-view/602b9c578efcd7261f1ce9fe

Back to top button
error: Content is protected !!