தமிழ்நாடுமாவட்டம்

மதுரை ஆவினில் வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்..

மதுரை ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள கால்நடை ஆலோசகர் பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ளவர் 01-03-2021 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

காலிப்பணியிடங்கள்:

கால்நடை ஆலோசகர் (Veterinary Consultant) பதவிக்கு 5 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு:

31.01.2021 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 50 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கல்வி தகுதி:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் B.V.Sc முடித்திருக்க வேண்டும்.

மாத சம்பளம்:

மதுரை ஆவின் நிறுவனத்தில் கால்நடை ஆலோசகர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்க்கு மாதம்: ரூ.30,000 முதல் ரூ.43,000 வரை ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை:

விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் ஆனது 01.03.2021 ஆம் தேதி காலை 09.00 மணிக்கு நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆவின் நிறுவனத்தில் பணிபுரிய ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது 2 புகைப்படங்கள், கல்வி மற்றும் அனுபவ சான்றிதழ்களுடன் 01.03.2021 அன்று நடைபெறவுள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Official PDF Notification – https://aavinmilk.com/career-view?url=/documents/20142/0/N.A.D.P+SCHEME+20-21++DETAILS+MADURAI+%281%29.pdf/e6aecee3-76b5-3280-b4bc-c2b802ac0c47&noticeURL=/documents/20142/0/NOTIFICATION+%282%29.pdf/d36a5fce-9f6f-a95a-af46-445cda3ffc22&noticeName=

Application Form – http://www.aavinmadurai.com/img/upload/NADP_Application.pdf

Back to top button
error: Content is protected !!