தமிழ்நாடு

முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்ப பதிவு – தேர்வர்கள் ஏமாற்றம்!!

தமிழகத்தில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு செப்டம்பர் 16 ஆம் தேதி முதல் துவங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், விண்ணப்ப பதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் தேர்வர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் தற்போது கொரோனா 2 ஆம் பரவல் ஓய்ந்துள்ளதை தொடர்ந்து, தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட அரசு போட்டித் தேர்வுகள் குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழக அரசுப் பள்ளிகளில் காலியாக இருக்கும் 2,207 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக போட்டித் தேர்வுகள் நடத்தப்பட இருப்பதாக கடந்த 9 ஆம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது.

இந்த போட்டித் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு செப்டம்பர் 16 ஆம் தேதி முதல் அக்டோபர் மாதம் 17 ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. அறிவிக்கப்பட்டபடி, செப்டம்பர் 16 ஆம் தேதியான நேற்று, ஆன்லைனில் விண்ணப்பிக்க முயன்ற விண்ணப்பதாரர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஏனென்றால் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில், ஆன்லைனில் விண்ணப்பத்துக்கான இணைப்புகள் எதுவும் கொடுப்படவில்லை. இதே நிலை நேற்று மாலை 6 மணி வரையும் நீடித்திருந்தது. இதனால் மாலை வரை காத்திருந்த விண்ணப்பதாரர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

இதற்கு முன்னதாக கடந்த பிப்ரவரி 11 ஆம் தேதியன்று அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 2,098 முதுகலை பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் பணியிடங்களை நிரப்பப்படும் என கொடுக்கப்பட்டிருந்த அறிவிப்பின் கீழ், மார்ச் 1 ஆம் தேதி ஆன்லைனில் விண்ணப்பிக்க முயன்ற தேர்வர்களும் ஏமாற்றம் அடைந்தனர். அப்போது, சில தொழில்நுட்ப காரணங்களால் ஆன்லைன் விண்ணப்ப பதிவு தள்ளி வைக்கப்படுவதாக பின்னர் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  அமெரிக்கா செல்லும் தேமுதிக தலைவர் விஜயகாந்த்..!
Back to top button
error: