ஆரோக்கியம்

புற்றுநோயை தடுக்கும் ஆப்பிள்!

ஆப்பிளில் உள்ள சத்துக்கள் உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதோடு முகப் பொலிவையும், முகத்திற்கு அழகையும் தருகிறது. இதில் ஏராளமான ஊட்டச்சத்துக்களும், மருத்துவ குணங்களும் நிறைந்துள்ளன. ஆப்பிள் குளிர் பிரதேசங்களான சிம்லா, காஷ்மீர் போன்ற பகுதிகளில் அதிகம் விளைகிறது.

ஆப்பிள் பழத்தில் இரும்பு, புரோட்டீன், கொழுப்பு, பாஸ்பேட், சர்க்கரை, பொட்டாசியம், சோடியம், பெக்டின், வைட்டமின் பி1, பி2, சி, முதலிய சத்துகள் அதிக அளவில் நிறைந்துள்ளன. அதையடுத்து, ஆப்பிளை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.

இதய நோய் பாதிப்பு ஏற்படாமல் தடுப்பதில் ஆப்பிள் சிறந்து விளங்குகிறது.

ஆப்பிளில் உள்ள நார்ச்சத்து, செரிமானத்திற்கு உதவுகிறது.

ஆப்பிள் புற்றுநோயைத் தடுக்கிறது. குறிப்பாக, மார்பக புற்றுநோய் மற்றும் குடல் புற்றுநோய் போன்றவற்றின் அபாயத்தைத் தடுக்கிறது.

புற்றுநோய் வரக்கூடாது என்று நினைப்பவர்கள், தினமும் ஒரு ஆப்பிளை தோலுடன் சாப்பிட வேண்டும். ஏனெனில், தோலில் தான் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன.

ஆப்பிளில் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் உள்ளதால், உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் கரைந்து விடும்.

ஆப்பிளில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், மூளை செல்கள் அழியாமல் பாதுகாப்பதோடு, நரம்பு மண்டலத்தையும் பாதுகாக்கிறது.

ஆப்பிளை அதிகம் சாப்பிடுவதால், கண்புரை நோய் ஏற்படுவதைத் தடுக்கலாம்.

ஞாபக சக்தி அதிகரிப்பதோடு, மூளையில் நோய் தாக்கம் ஏற்படும் வாய்ப்பும் குறையும்.

இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை ஆப்பிள் சீராக வைப்பதால், நீரிழிவு உள்ளவர்கள், இதனை சாப்பிடுவது மிகவும் நல்லது.

இரத்த சிவப்பணுக்களின் அளவை அதிகரிக்கவும், இரத்த சோகையை சரிசெய்யவும் பயன்படுகிறது.

இரத்த நாளங்களில் உள்ள அழற்சியை குறைக்கிறது.

இதையும் படிங்க:  நீரிழிவு பிரச்சனையா? இதை சாப்பிடுங்கள்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: