ஆரோக்கியம்தமிழ்நாடு

முகத்தின் அழகினைக் கூட்டும் ஆப்பிள் ஃபேஸ்பேக்..!

முகத்தின் அழகினைக் கூட்டும் வகையிலான ஆப்பிள் ஃபேஸ்பேக்கினை வீட்டில் செய்வது எப்படி என்றும், அதனைப் பயன்படுத்துவது எப்படி என்றும் பார்க்கலாம்.

தேவையானவை:

ஆப்பிள்- 1

தேங்காய்- 5 துண்டு

ஆலிவ் ஆயில்- 1 ஸ்பூன்

செய்முறை:

1. ஆப்பிளை தோல் நீக்கி, சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

2. அடுத்து தேங்காய்த் துண்டுகளை மிக்சியில் போட்டு தண்ணீர்விட்டு பால் பிழிந்து கொள்ளவும்.

3. அடுத்து தேங்காய்ப் பாலுடன் ஆப்பிள் துண்டுகளைப் போட்டு மைய அரைத்து அத்துடன் ஆலிவ் ஆயில் சேர்த்தால் ஆப்பிள் ஃபேஸ்பேக் ரெடி.

இந்த ஆப்பிள் ஃபேஸ்பேக்கினை முகத்தில் அப்ளை செய்து, 30 நிமிடங்கள் ஊறவிட்டுக் குளிர்ந்தநீரால் கழுவினால் முக அழகு கூடும்.

Back to top button
error: Content is protected !!