தமிழ்நாடு

தமிழகத்திற்கு இன்று மேலும் 5 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி வருகை..!

தமிழகத்திற்கு இன்று மேலும் 5 லட்சம் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசிகள் வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவலுக்கு எதிராக தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மேலும் தடுப்பூசி தட்டுப்பாடு காரணமக பல்வேறு மையங்களில் தடுப்பூசி செலுத்தும் பணி தொய்வு அடைந்து உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தமிழகத்திற்கு கூடுதலாக 5 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இன்று மதியம் சென்னைக்கு வர உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: