தமிழ்நாடு

கியூசெட் நுழைவுத்தேர்வு குறித்த அறிவிப்பு – செப்.17,18 தேதிகளில் தேர்வு!!

நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கை வழங்க நடத்தப்படும் “கியூசெட்” நுழைவு தேர்வு தமிழக மாணவர்களுக்கு வருகிற செப்டம்பர் 17, 18 ஆம் தேதிகளில் நடைபெறும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசு சார்பில் தமிழகம், கேரளா, ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் மத்திய பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகங்களில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப் படிப்புகளில் சேர கியூசெட் என்ற மத்திய பல்கலை தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்நிலையில் தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் மத்திய பல்கலைக்கழகங்களில் சேர நுழைவுத்தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மத்திய மனிதவள அமைச்சகத்தின் கீழ் திருவாரூர் மாவட்டத்தில் செயல்படும் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் என மொத்தம் 12 மத்திய பல்கலைகளில் நுழைவுத்தேர்வு நடைபெற உள்ளதாகவும் அதற்கான தேதிகள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி கியூசெட் நுழைவு தேர்வு வருகிற செப்டம்பர் 15, 16, 23, 24 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுகள் மாநிலம் முழுவதும் முக்கிய நகரங்களில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அதன்படி சென்னை, திருச்சி, கோவை, மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, வேலுார், சேலம், கடலுார் ஆகிய மாவட்டங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மத்திய பல்கலைக்கழகங்களில் சேர்ந்து படிக்க விருப்பமுள்ள மாணவர்கள் இந்த தேர்வை எழுத விண்ணப்ப பதிவு நேற்று முன்தினம் தொடங்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் அனுப்ப செப்டம்பர் 2 ஆம் தேதி கடைசி நாள் ஆகும். இந்த தேர்வானது கணினி மூலமாக நடத்தப்படுகிறது. இந்த தேர்வுகள் குறித்த கூடுதல் விவரங்களுக்கு https://cucet.nta.nic.in/ என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

இதையும் படிங்க:  நடப்பு கல்வியாண்டில் பாடத்திட்டங்கள் குறைப்பு – பள்ளிக்கல்வித்துறை ஆணையர் ஆலோசனை!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: