இந்தியாஆன்மீகம்

சபரிமலையில் கூடுதல் தளர்வுகள் அறிவிப்பு!

இரண்டு மாத கால மண்டல விளக்கு முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த 16ம் தேதி திறக்கப்பட்டது. கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை தொடர்ந்து, மேலும் தளர்வுகளை தேவசம் போர்டு அறிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “பம்பையிலிருந்து இருந்து நீலிமலை, அப்பாச்சி மேடு மற்றும் மரக் கூட்டம் ஆகிய இடங்களில் உள்ள வனப்பகுதிகளில் பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படுவர். சபரிமலை சன்னிதானத்தில் பக்தர்கள் இரவில் தங்குவதற்கு அனுமதி அளிக்கப்படும். பம்பை ஆற்றில் குளிக்கவும் தர்பணம் செய்யவும் அனுமதி அளிக்கப்படும்” என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: