தமிழ்நாடுமாவட்டம்

புத்தகத்தை பார்த்து தேர்வு எழுத அண்ணா பல்கலை., அனுமதி..!

அண்ணா பல்கலைக்கழக ஆன்லைன் செமஸ்டர் தேர்வுகளை புத்தகத்தை பார்த்து எழுத அனுமதிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக கல்லூரிகள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் இறுதி முதல் மூடப்பட்டு இருந்தன. அப்போது மாணவர்களுக்கான வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டன. இதனை தொடர்ந்து கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்ததால் இறுதியாண்டு மாணவர்களுக்கு முதலில் வகுப்புகள் தொடங்கப்பட்டு, அதைத்தொடர்ந்து மற்ற மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வந்தன.

தற்போது மீண்டும் நோய் தொற்று பாதிப்பு அதிகரித்ததால் கல்லூரிகள் தற்போது மூடப்பட்டு உள்ளன. ஆனால் கல்லூரி மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வை பொறுத்தவரையில் ஆன்லைன் மூலம் நடத்த வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழக ஆன்லைன் செமஸ்டர் தேர்வை புத்தகத்தை பார்த்து எழுத மாணவர்களுக்கு அனுமதி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒருவரி கேள்வி பதில்போல் இல்லாமல், விரிவான வகையில் பதில் அளிக்கும் வகையில் கேள்வி கேட்கவும் அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க:  தூத்துக்குடி மாவட்டத்தில் திடீர் மழை.. தணிந்த வெப்பம்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: