அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு சம ஊதிய கோரிக்கையை உடனே நிறைவேற்ற வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு பாமக கட்சியில் செயலாளர் அன்புமணி கோரிக்கை வைத்துள்ளார்.
கடந்த இரண்டு வருட காலமாக கொரோனா காரணமாக எந்தவொரு மாநிலங்களிலும் அரசு ஊழியர்கள் மற்றும் தேசிய ரேஷன் ஊழியர்கள் மற்றும் மருத்துவ துறையில் பணிபுரிபவர்களுக்கு DA உதவித் தொகையை வழங்கப்படாமல் இருந்தனர். அதன்படி, கொரோனா குறைந்த நிலையில் அரசு ஊழியர்களுக்கும் மத்திய அரசு மற்றும் அரசு ஊழியர்களுக்கும் அந்தந்த மாநிலங்களில் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றது.
மேலும், மத்திய அரசு மற்றும் அரசு ஊழியர்களுக்கு அவ்வப்போது பணி உயர்வு, சம்பள உயர்வு முதலான பல சலுகைகளை வழங்கி வருகிறது. கொரோனா காலகட்டத்தில் மட்டும் சம்பள உயர்வு 28 சதவீதமாக இருந்த அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தப்பட்டு 31 சதவீதமாக உயர்த்தியது குறிப்பிடத்தக்கது. எப்போதும் ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி மார்ச் மாதத்தில், ஜூலை மாதத்தில் அகவிலைப்படியும் சம்பள உயர்வு கிடைக்கும். அதன்படி 2022 ஆம் ஆண்டிற்கான முதல் அகவிலைப்படி மார்ச் மாதத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், கொரோனா காலகட்டத்தில் தொடர்ந்து மருத்துவமனைகளில் பணிப்புவர்கள் ஓய்வூ இல்லாமல் பணிபுரிந்தது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் ,அரசு மருத்துவர்களுக்கு மட்டும் DA உதவித்தொகையை உயர்த்தப்படாமல் இருக்கின்றன.தமிழ்நாடு அரசு கடந்த 2009-ம் ஆண்டு வெளியிட்ட அரசாணையின்படி 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை உயர்த்த வேண்டிய அரசு டாக்டர்களுக்கான ஊதியத்தை, கடந்த 11 ஆண்டு காலமாக உயர்த்தப்படவில்லை. அதனால் அரசு மருத்துவர்களின் சம ஊதிய கோரிக்கையை உடனே நிறைவேற்ற வேண்டும் என அன்புமணி கோரிக்கை வைத்துள்ளார். அரசு மருத்துவர்களுக்கு, பணி காலத்தின் 5, 9, 11, 12 ஆகிய ஆண்டுகளில் காலம் சார்ந்த ஊதிய உயர்வு வழங்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh