தமிழ்நாடு

பள்ளிகள் திறக்கப்படாது? மாவட்ட ஆட்சியர் சற்றுமுன் பிறப்பித்த உத்தரவு!!

விருதுநகர் மாவட்டத்தில் பணிபுரியும் பள்ளி ஆசிரியர்களில் ஒருவர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை என்றாலும் அந்த பள்ளி திறக்கப்படாது என்ற புதிய உத்தரவை பிறப்பித்து அம்மாவட்ட ஆட்சியர் அறிவிப்பை வெளியிட்டுள்ளர்.

தமிழகம் முழுவதும் வரும் செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் மீண்டுமாக திறக்கப்பட உள்ளது. கொரோனா பரவலால் கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டுள்ள பள்ளிகள் தற்போது 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு மட்டும் மீண்டுமாக திறக்கப்பட இருக்கிறது. இந்நிலையில் பள்ளிகள் திறக்கப்படும் போது ஏதேனும் ஒரு ஆசிரியர் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ளவில்லை என்றால் அந்த பள்ளி திறக்கப்படாது என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

அதாவது பள்ளிகள் திறக்கப்படுவதற்கு முன்னதாகவே அனைத்து பள்ளி ஆசிரியர்களும் கட்டாயமாக கொரோனா தடுப்பூசி எடுத்திருக்க வேண்டும் என ஒவ்வொரு பள்ளியின் தலைமை ஆசிரியருக்கும் பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. மேலும் ஆசிரியர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொண்ட சான்றிதழை வரும் ஆகஸ்ட் 27 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை செயல்படுத்துவது தொடர்பாக விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி தலைமையில் பள்ளி ஆசிரியர்களுக்கு தடுப்பூசி குறித்து உத்தரவிட்டு, முதன்மை கல்வி அலுவலர் சார்பில் மாவட்டத்தின் அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதிக்குள் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் எனவும், தடுப்பூசி போடாத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  இன்றைய (நவ.25) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!
Back to top button
error: