மாவட்டம்

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு ஒரு வாய்ப்பு!

திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் புதுப்பிக்க தவறியவர்களுக்கு மீண்டும் புதுப்பிக்க ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவினை புதுப்பிக்க தவறிய பதிவுதாரர்கள், சிறப்பு புதுப்பித்தல் சலுகையை பயன்படுத்தி மீண்டும் ஒரு முறை புதுப்பித்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கலெக்டர் விசாகன் கூறியிருப்பதாவது:-

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பெயர் பதிவு செய்து, 2014,முதல் 2019 ஆகிய ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவினை பல்வேறு காரணங்களினால் புதுப்பிக்க தவறிய வர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி இச்சலுகையைப் பெறவிரும்பும் பதிவுதாரர்கள் 02.12.2021 முதல் மூன்று மாதங்களுக்குள் அதாவது 01.03.2022-க்குள் இணையம் வாயிலாக பதிவினைப் புதுப்பித்துக் கொள்ளலாம்.

அவ்வாறு இணையம் வாயிலாக பதிவினைப் புதுப்பிக்க இயலாத பதிவுதாரர்கள் மேற்குறிப்பிட்ட தேதிக்குள் சம்மந்தப்பட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு பதிவஞ்சல் மூலமாக விண்ணப்பம் அளித்தும் புதுப்பித்துக்கொள்ளலாம். இணையம் மூலமாக புதுப்பித்தல் மேற்கொள்ளுதல் வேண்டும். மேலும் 01.03.2022 வரை பதிவுதாரர்கள் தங்களது பதிவினை புதுப்பித்துக்கொள்ளலாம், என கலெக்டர் தெரிவித்துள்ளார்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: