ஆரோக்கியம்

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பெண்கள் உடற்பயிற்சி செய்யலாமா? சந்தேகங்களுக்கு கிடைத்த விளக்கம்..!

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பெண்கள் உட்பயிற்சி செய்யலாம் என்ற சந்தேகம் நிலவி வரும் நிலையில், அதற்கான பதில் கிடைத்துள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ள வேண்டும் என்றால் தடுப்பூசி தான் அதற்கு நிரந்தரம். இதனால் மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் படி உலகசுகாதார அமைப்பு கூறி வருகிறது.

அதன் படி தற்போது தடுப்பூசி போட்டு கொள்வோரின் எண்ணிக்கையும், உலக அளவில் உயர்ந்து வருகிறது. இது போன்ற நிலையில், தடுப்பூசி போட்டுக் கொண்ட பெண்கள், உடற்பயிற்சி, யோகா போன்ற உடல் இயக்கம் சார்ந்த பயிற்சிகளில் ஈடுபடலாமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இது குறித்த கேள்விக்கு, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) நிறுவனத்தின் ஒரு அங்கமான ஜோத்பூரில் உள்ள தேசிய நோய்த்தொற்று நோய்களுக்கான நடைமுறை ஆராய்ச்சி நிறுவனத்தின் (என்.ஐ.ஆர்.என்.சி.டி) இயக்குனர் மருத்துவர் அருண் சர்மா கூறுகையில், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு வழக்கமான உடற்பயிற்சி அல்லது யோகாசனம் போன்ற பயிற்சிகளை பெண்கள் தவிர்க்க வேண்டியதில்லை.

இருப்பினும் ஊசி செலுத்தப்பட்ட இடத்தில் ஏதேனும் வலி அல்லது வீக்கம் ஏற்பட்டால், கைக்கு அதிக அழுத்தம் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது என்று கூறியுள்ளார். மற்றபடி வழக்கமான பயிற்சிகளை செய்யலாம்.

உடற்பயிற்சி மற்றும் உடல் செயல்பாடு உடலுக்கு நல்லது என்றும், அடிப்படையில், நோயெதிர்ப்பு சக்தியை அதிக அளவில் மேம்படுத்தலாம் என்றும் கூறப்படுகிறது.

நீங்கள் தடுப்பூசி போட்ட பின்னர் அவ்வாறு செய்வது நல்லது என்றாலும், உடனடியாக செய்ய நிர்பந்திக்க வேண்டாம். எப்படி கொரோனாவில் இருந்து மீண்ட பிறகு, நல்ல உயிர்வாழும் நோயெதிர்ப்பு சக்தியை பெற உங்கள் உடலுக்கு சிறிது காலம் ஓய்வு தேவைப்படுகிறதோ, தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகும் ஓய்வு அவசியம். தடுப்பூசி போடும் நாளில் அதிகமாக உழைப்பது அல்லது தீவிர உடற்பயிற்சி செய்வது நல்லது அல்ல. உங்களுக்கான ஓய்வு நேரத்தை எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: