தமிழ்நாடுஇந்தியா

தனியாக வேணாம்.. இபிஎஸ்-ஒபிஎஸ்சுக்கு அதிர்ச்சி கொடுத்த அமித்ஷா..

தமிழக சட்டமன்ற தேர்தல் பணிகளில் திமுகவும், அதிமுகவும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. முதற்கட்டமாக கூட்டணி கட்சிகளிடம் அவை மறைமுகமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று சென்னை வருகிறார். அரசு விழாக்களுக்காக வருகிறார் எனக்கூறப்பட்டாலும் தேர்தல் கூட்டணி மற்றும் அடுத்த கட்ட அரசியல் நகர்வுகளுக்காக அமித்ஷா வருவதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

இந்த நிலையில் அரசு நிழ்ச்சிகளை முடித்துக்கொண்டு லீலாபேலஸ் ஓட்டலில் அமித்ஷா பாஜ நிர்வாகிகளை சந்திக்கிறார். அப்போது தமிழக தேர்தல் நிலவரம் குறித்தும் அரசியல் கூட்டணிகள் குறித்தும் பேசி முடிவெடுக்கப்படும் என தெரிகிறது. அதன் பின்னர் இபிஎஸ்-ஓபிஎஸ் இருவரும் அமித்ஷாவை சந்திக்கின்றனர்.

இந்த நிலையில் முதல்வரும் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி அரசியல் விவகாரங்கள் குறித்துபேச நேரம் கேட்டிருந்தார். அதேபோல் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஒ பன்னீர்செல்வமும் அமித்ஷாவை சந்திக்க தனியாக நேரம் கேட்டிருந்தார். ஆனால் எதிர்பாராத விதமாக தனித்தனி சந்திப்பிற்கு ஒத்துக்கொள்ளாத அமித்ஷா இருவரையும் சேர்ந்தே வர சொல்லி விட்டார்.

தேர்தல் கூட்டணி, சசிகலா விவகாரம் என இருவரும் தனித்தனியாக அமித்ஷாவிடம் பேச நினைத்திருந்த நிலையில் இருவரையும் சேர்ந்தே சந்திப்பதாக அமித்ஷா கூறியிருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறத. இன்றைய தினம் அதிமுக கூட்டணி, சசிகலா தரப்பு நிலை உள்ளிட்டவை குறித்து முடிவெடுக்கப்படும் என அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன..

loading...
Back to top button
error: Content is protected !!