சினிமாதமிழ்நாடுபொழுதுபோக்கு

அமலா பாலின் புகைப்படத்தை வெளியிட அவரின் முன்னாள் காதலனுக்கு தடை – உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழ் திரையுலகின் மூலம் அறிமுகமானவர் அமலாபால். இவருக்கு 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நிச்சயதார்த்த புகைப்படங்களை சமூகவலைத்தடங்களில் வெளியிட்ட முன்னாள் நண்பர் பவ்னிந்தர் சிங் என்பவருக்கு அமலாபாலின் புகைப்படத்தை சமூகவலைதடங்களில் வெளியிட உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

அமலாபால்

அமலாபால் தமிழ் திரையுலகில் சிந்து சமவெளி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானர். பின்னர் மைனா, சேட்டை, தலைவா, முப்பொழுதும் உன் கற்பனைகள் மற்றும் அம்மா கணக்கு என்ற பல திரைப்படங்களில் நடித்து வந்தார். இவருக்கு இயக்குநர் ஏ .எல்.விஜய் என்பவருடன் ஏற்கனவே திருமணம் நடந்து முடிந்தது. திருமணமான சில காலத்திலேயே இருவரும் பிரிந்தனர்.

amalapaul 1

சில காலம் கழித்து அமலாபால் மீண்டும் திருமணம் செய்து கொள்ளும் ஆசையால் 2019 ஆம் ஆண்டு மும்பை தொழிலதிபராக இருந்த பவ்னிந்தர் சிங் என்பவரை ராஜஸ்தானில் நிச்சயம் செய்துள்ளார். பின்பு இவருடனும் கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் நடைபெற இருந்த திருமணத்தை நிறுத்தியுள்ளார், அமலாபால்.

தடை விதிப்பு

சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி சதீஷ்குமார் தலைமையில் அமலாபால் முன்னாள் நண்பரிடம் அவரது புகைப்படத்தை வெளியிட்ட காரணத்தால் நஷ்ட ஈடு கேட்ட வழக்கு இன்று விசாரிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த பின் பவ்னிந்தர் சிங்கிற்கு இடைக்கால தடை விதித்துள்ளது.

amalapaul engagement

இவர் தனக்கும் அமலாபாலுக்கும் ஏற்கனவே திருமணம் நடந்தாகவும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் அமலாபாலின் எதிர்ப்பை தொடர்ந்து இத்தகைய புகைப்படங்கள் ஏற்கனவே சமூகவலைத்தடங்களில் இருந்து நீக்கப்பட்டன என்றும் தெரிய வருகிறது.

loading...
Back to top button
error: Content is protected !!